24
November, 2026

A News 365Times Venture

24
Tuesday
November, 2026

A News 365Times Venture

"கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் துயரில் நிற்கிறார்கள்"- உதயநிதி ஸ்டாலின்

Date:

“விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!

இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்

சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் – தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.

அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.

இந்த நிலை ஏற்படக்கூடும் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் – அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.

ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?" – சீமான்

"கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்" என்று...

"கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ்...

தவெக MLA மீது வழக்கு: “4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" – ஸ்டாலின் காட்டம்

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று,...

திருபரங்குன்றம்: மதுரை புறப்பட்ட எல். முருகன்; கோவையிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை!|LIVE

திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்...