18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

கொல்கத்தா: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

Date:

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் நேற்றிரவு ( அக்.17) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 25 போ் காயமடைந்திருக்கின்றனர்.

வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர்.

கொல்கத்தா

திடீரென மழை பெய்யத் தொடங்கியதும் பலா் முண்டியடித்து பந்தலில் ஒதுங்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

25 பேர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவா்களுக்கு கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வா் சுவேந்து அதிகாரி சிகிச்சை பெற்று வருபவா்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கொல்கத்தாவில் நடந்த கூட்ட நெரிசல் மிகவும் வேதனை அளிக்கிறது. குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!' – சென்னையில் அதிக மழை கொட்டித்தீர்த்த டாப் 10 இடங்கள்!

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில்...

திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா… உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல...

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு...

அரிசி விலை அதிகரிக்க இதுதான் காரணம் – பின்னணி பகிரும் ரைஸ்மில் உரிமையாளர்!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள்...