18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

Date:

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அமைச்சர் ஆதவ்

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகளை கடந்த இரண்டு மாதங்களாக செய்து கொண்டிருக்கிறோம். நேற்று பெய்திருப்பது வழக்கமான மழை இல்லை. வடகிழக்குப் பருவமழை சமயத்தில் சென்னையில் மொத்தமாக 69 செ.மீ மழைதான் பெய்யும். ஆனால், நேற்று மாலை 6 மணியிலிருந்து இரவுக்குள் 35.2 செ.மீ மழை பெய்துள்ளது. மேக வெடிப்பு என சொல்கின்றனர். அதைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன் பகிர்வோம்.

இப்போதைக்கு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் 1913 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள்.

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

15000 மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மழை குறித்த அப்டேட்டை கேட்டுக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு பெரிய மழை பெய்திருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். பழைய கட்டடங்களில் வசிக்கும் மக்களை தற்காலிக தங்கும் இடங்களுக்கு மாற்றும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறோம். சென்னையிலுள்ள பழமையான ஹவுஸிங் போர்டுகளின் புள்ளிவிவரங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் மழை பெய்யும் போது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பாதுகாப்புக்காக மின் தடையையும் செய்வோம். மக்கள் எதுவாக இருந்தாலும் 1913 என்ற எண்ணை அழைக்கவும்.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா… உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல...

அரிசி விலை அதிகரிக்க இதுதான் காரணம் – பின்னணி பகிரும் ரைஸ்மில் உரிமையாளர்!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள்...

திருச்சி: "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!" – தொல்.திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி...

"EVM வேண்டாம்; வாக்குச்சீட்டு முறை வேண்டும்" – காங்கிரஸ், தவெகவிற்கு கண்டனங்கள் – திமுக தீர்மானங்கள்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திமுக...