18
July, 2026

A News 365Times Venture

18
Saturday
July, 2026

A News 365Times Venture

கேரளா : 'மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம், ஆனால் இந்தியை..!' – உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

Date:

மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் – தர்மேந்திர பிரதான்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆர்.பிந்து, “மாணவர்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. முக்கியமாக வெளிநாட்டு மொழிகளையும் நமது மாணவர்கள் கற்க வேண்டும். எனவேதான் மொழிகளுக்களுக்கான உயர் திறன் மையத்தை கேரளத்தில் நிறுவியுள்ளோம்.

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். அனைத்து மொழிகள் இடையேயும் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். பிற மொழிகளை ஏற்றுக்கொள்வது, மொழிகளுடன் இணைந்து செயல்படுவது கேரள கலாசாரத்தின் ஒரு பகுதியாக தொடக்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து

பல அயல்மொழிகளையும் கேரளம் ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது கேரள மாணவர்களிடையே மலையாளத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் பல்வேறு மொழிகளைக் கற்க ஊக்கமளித்து வருகிறோம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார்...

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து...

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு...

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...'...