27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..?

Date:

தவெக-வின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம். இவர் நேற்று இரவு கோடையான் தோட்டம் அருகே காரில் சென்றுள்ளார். கார் இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டூவீலரில் வந்த மூன்று நபர்கள் காரை வழி மறித்து முருகானந்தத்தை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனை முன்பு குவிந்த தவெக-வினர்

அதில், அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத மூன்று நபர்கள் தன்னை தாக்கியதாகவும், ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கண்ணாடி உடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது முருகானந்தத்தின் கார் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. தாக்கியதில் முகம் மற்றும் நெஞ்சு வலிப்பதாக முருகானந்தம் கூறியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையறிந்த தவெக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு இரவிலும் குவிந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தவெக தரப்பில் பேசு பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்தவர்களிடம் பேசினோம். பாரம்பர்யமிக்க கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவத்தின் இயக்குனர் பதவிக்கு ஆன்லைன் ஓட்டிங் அடிப்படையில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

முருகானந்தம்

இந்த பதவிக்கு தவெக-வின் மாவட்ட பொருளாளர் சந்திரன், சந்தோஷ், மாநகரச் செயலாளர் முருகானந்தம் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த அஞ்சனா மற்றும் தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் ஏற்பட்ட போட்டி காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்குமா அல்லது வேறு எதாவது பிரச்னையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவெக வட்டத்தில் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

RTI-ல் சட்டம் – ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு – திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு குறித்து...

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு அரசு தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்ட...

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச்...

'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு

சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில்...