26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' – தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

Date:

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி மக்களுக்கு ‘குக்கர்’ பரிசு வழங்கி உற்சாகமூட்டியிருந்தார்.

அமைச்சர் ஆனந்த்

மேதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துகொண்டிருந்தார் அமைச்சர் என்.ஆனந்த்.

அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு மதியம் 12 மணிக்கு மேல் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறப்பதற்காக வருகை தந்தார்.

சிறப்புப் பூஜைகளை முடித்துவிட்டு அலுவலகத்தைத் திறந்த என்.ஆனந்த், அங்கு கூடியிருந்த தொகுதி மக்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள 3 லி ‘குக்கர்’களைப் பரிசாக வழங்கினார்.

குடும்ப அட்டையின் அடிப்படையில் 105 குடும்பங்களுக்கு குக்கர் வழங்கிய அமைச்சர் ஆனந்த், அவர்களுக்கு அறுசுவை மதிய விருந்தையும் வழங்கினார்.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

இந்த நிகழ்வை முடித்த பிறகு அமைச்சர் ஆனந்திடம் மேகதாது அணை விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர், ”எங்கள் நிலைப்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிப்போம். என்னுடைய துறை சார்ந்த விவகாரங்களை அறிக்கையாக கொடுப்பேன்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்?

'ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற,...

வேலூர்: செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டதாகப் புகார்; தவெக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து போராட்டம்

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார்,...

'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' – யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு – விவரம் என்ன?

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள்...

சட்டம் ஒழுங்கு: “இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?" – தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன்...