26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' – யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு – விவரம் என்ன?

Date:

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.

சி.வி அணி

தவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அதிமுகவுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிரிந்தது. சட்டமன்றத்தில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாகவும் எடப்பாடிக்கு ஆதரவான 22 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருந்தனர். சி.வி.சண்முகம் உட்பட அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.

Team CV
Team CV

இந்நிலையில், திடீரென அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

மதுராந்தகம் – மரகதம் குமரவேல்,

தாராபுரம் – சத்யபாமா,

பெந்துறை – ஜெயக்குமார் ஆகிய எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.

இவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்?

'ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற,...

வேலூர்: செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டதாகப் புகார்; தவெக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து போராட்டம்

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார்,...

'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' – தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான...

சட்டம் ஒழுங்கு: “இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?" – தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன்...