14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

காவிரி விவகாரம்: "தவெக மட்டும் இதை செய்தால், அதுதான் நேஷனல் செய்தி!" – அன்புமணி ராமதாஸ்

Date:

பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“தமிழ்நாடு என்பது பொதுவானது. முதலமைச்சர் என்பவர் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பெற்றவர். சமீபத்தில் கூட தமிழக முதலமைச்சர் கர்நாடக போவாரா? இல்லையா? பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று தெரியவில்லை.

முதல்வர் விஜய்

இதில் மறைப்பதற்கு என்ன வேண்டியிருக்கிறது. வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையாக என்ன நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் ஜனநாயக முறை.

சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால் கர்நாடக தண்ணீர் கொடுத்துவிடுமா?. நான் கடந்த இரண்டு மாதங்களில் 100 முறை சொல்லி இருக்கிறேன். தயவு செய்து அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று…

ஒரு மனதாக இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். ஏன்னென்றால் இது தமிழ்நாட்டின் பொதுப்பிரச்னை. அவர்களுக்கு (தவெக) அனுபவம் கிடையாது. நீங்கள் மட்டுமே இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது. அனுபவமிக்க நிறையக் கட்சிகள் இங்கு இருக்கின்றன. அவர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

முதல்வர் எல்லா கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்தால் அதுதான் நேஷனல் செய்தி. அரசியல் அழுத்தம் கொடுக்காமல் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது” என்று தவெக அரசை அன்புமணி குற்றம் சாட்டியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Eye Scan: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையாக நாகாலாந்து அமைச்சர் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்னை

வடகிழக்கு இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம்...

தூய்மைப்படுத்தும் சடங்கு: “என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளீர்கள்" – மல்லிகார்ஜுன கார்கே உருக்கம்!

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரகாண்ட்...

'எங்களை விட்டுருங்க' – 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல்...

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர்...