27
November, 2026

A News 365Times Venture

27
Friday
November, 2026

A News 365Times Venture

ஓடிய அமைச்சர்; கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்? டு கனிமொழி Vs உதயநிதி வரை… கழுகார் அப்டேட்ஸ்

Date:

அ.தி.மு.க-வின் 25 ஆண்டுகாலக் கோட்டையான பல்லடத்தில், அக்கட்சி வேட்பாளர் பரமசிவத்தை 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திக் கவனம் ஈர்த்தவர் த.வெ.க எம்.எல்.ஏ ராம்குமார்.

ராம்குமார்

இப்போது சொந்தக் கட்சியினரே அவர்மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். கல்குவாரி உரிமையாளர்களிடமிருந்து இன்னோவா கார் பெற்றது, நீதிமன்ற உத்தரவை மீறி ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டித்தது, தொண்டர்களுடன் பொங்கலூர் காவல் நிலையத்துக்குள் ரீல்ஸ் எடுத்தது, பெண் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பல்லடம் நகரச் செயலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டது என நீள்கிறதாம் புகார் பட்டியல். இதற்கிடையே, ‘கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்’ என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறதாம்.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் அ.தி.மு.க. சார்பில் பேட்டி அளிக்கவோ கருத்துத் தெரிவிக்கவோ கட்சித் தலைமையின் ஒப்புதல் அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் நிலைப்பாடுகளைத் தெரிவிக்கத் தலைமைச் செய்தித் தொடர்பாளராகக் கல்யாணசுந்தரத்தை நியமித்திருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

“இரண்டு கோடித் தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர்” என்று எடப்பாடி பேசியதற்கு வீடியோவில் விளக்கமளித்த ஆர்.பி.உதயக்குமார், “எடப்பாடியும் வேலுமணியும் ராமர், லட்சுமணன் போல” என்றார். மற்றவர்களைக் காட்டமாக விமர்சிக்கும் உதயக்குமார், வேலுமணி விஷயத்தில் அடக்கி வாசித்ததை எடப்பாடி ரசிக்கவில்லையாம். இந்த அறிவிப்பின் பின்னணியில் அந்த அதிருப்தியும் இருக்கிறதாம். வேலுமணி தரப்பு அடிக்கடி செய்தியாளர் சந்திப்பு நடத்துவதற்கும் இதன் மூலம் ‘செக்’ வைக்க முடியும் என்பது எடப்பாடியின் கணக்காம்.

திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு, வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கோயில் நிர்வாகமும் அறங்காவலர் குழுவும் ஆகம விதிகளின்படியே செயல்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம்

தீபம் ஏற்றும் இடம் குறித்து ஸ்தானிக பட்டர்களே பரிந்துரைத்ததாகவும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். “கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் எங்களிடம் ஆலோசிக்கவே இல்லை. இதில் எங்கள் பெயரை இழுத்தது தவறு” என்று பட்டர்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்களாம். அமைச்சர் நிர்மல் குமார் தரப்பிலிருந்து சமாதானம் பேச ஆட்களை அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, பிரமாணப் பத்திரத்தில் தங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றத்தில் எப்படி மறுப்பது என்று பட்டர்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார்களாம்.

மதுரை கிழக்கு தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ–வாக இருப்பவர் கார்த்திகேயன். இதற்கு முன்னர் தி.மு.க-வில் இருந்தார். கடந்த ஆண்டு, ’திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததது எனக்கு மனவேதனை தருகிறது.

அழகிரியின் ஆதரவாளர் என்பதாலேயே என்னைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்’ என்ற காரணத்தை சொல்லி தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார் கார்த்திகேயன்.

தற்போது திருப்பரங்குன்றத்தில் த.வெ.க அரசும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து தீபம் ஏற்றவில்லை, எனவே, ‘இப்போது த.வெ.க-வை விட்டு விலகிவிடுவீர்களா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். எம்.எல்.ஏ கார்த்திகேயனோ, ‘நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால் நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பேசுகிறார்கள்” என்று மழுப்புகிறார்.

தமிழ்நாடு அரசு மூலம் ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் தயாரிப்புப் பணிகள் பாதியளவுகூட முடிக்கப்படவில்லையாம். வழக்கத்தைவிட லேட்டாகவே அறிவிப்பை வெளியிட்டு அதைவிட லேட்டாக வேலைகளைத் தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் விஜய் பாலாஜி

இதே வேகத்தில் வேட்டி, சேலைகள் தயாரிப்பு நடந்தால் பொங்கலுக்கு வழங்குவது சாத்தியமில்லை என்கிற தகவல்கள் வெளியாகின்றன. சொதப்பல் நடந்தால் முதலமைச்சரிடம் தப்பிக்க முடியாது என்பதால், ஆட்டோலூம் எனப்படும் தானியங்கி தறிகள் மூலம் உற்பத்தி செய்யலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம் அமைச்சர் விஜய் பாலாஜி.

கொதித்துப்போன நெசவாளர்கள், அமைச்சரை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருக்கிறார்கள். ‘ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு வருகிறேன்’ என உள்ளே சென்ற அமைச்சர், 2 மணி நேரமாக நெசவாளர்களைக் காக்க வைத்துவிட்டுப் வேறு வழியாக காரில் ஏறி தப்பிச்சென்றிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிதான். அதேபோல மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி என ஆங்காங்கே முளைக்கும் பிரச்னைகள் தொடர்பான ஆய்வுகளை தொடங்கியிருக்கிறார்.

உதயநிதி, கனிமொழி

அலெர்ட்டான எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் டீம் ‘சின்னவரைவிட கனிமொழி மேடம் மிகுந்த சுறுசுறுப்பாக காணப்படுகிறார்’ என எடுத்துச் சொல்லியிருக்கிறது. எனவே கனிமொழி வெளிக்கொண்டுவந்த விவகாரத்தை வைத்து டி.ஜி.பி அலுவலகம், ஆளுநர் மாளிகை என மனு கொடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது: "முதல்வர் விஜய் நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்"- இபிஎஸ்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக...

கள்ளக்குறிச்சி: நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்; இறுகிய பிடி… தவெக எம்எல்ஏ கைதில் நடந்தது என்ன?!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக...

திருப்பரங்குன்றம்: "தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி"- நயினார்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச...

திருப்பரங்குன்றம்: "பிடிவாதத்தை கைவிட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்"- அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச...