27
November, 2026

A News 365Times Venture

27
Friday
November, 2026

A News 365Times Venture

கள்ளக்குறிச்சி: நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்; இறுகிய பிடி… தவெக எம்எல்ஏ கைதில் நடந்தது என்ன?!

Date:

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டை வெறும் வதந்தி என்றே குறிப்பிட்டு வந்த தவெக-வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், `இது தொடர்பாக எங்களுக்கு ஆட்சியர் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை’ என ஊடகங்களில் பேசிவந்தனர். அதே பதிலை நேற்று கூட நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தியது தமிழக அரசு.

அருள் விக்னேஷ் விவகாரம்

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

அதையடுத்து மறு விசாரணையின்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் தான் நடத்திய கலந்துரையாடல் குறித்த எழுத்துப்பூர்வமான குறிப்பை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியானது. BNS 75, 78, 79 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாலியல் நோக்கமுள்ள இரட்டை அர்த்தப் பேச்சுகள் அல்லது கருத்துகள் தெரிவிப்பது. பெண் விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் தொடர்ந்து பின்தொடர்வது. மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பது. இணையம், மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது. பெண்ணை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துதல். பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அருள் விக்னேஷ் - விஜய்
அருள் விக்னேஷ் – விஜய்

இதற்கிடையே இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கினார்.

கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெண் கலெக்டரிடம் 1½ மணி நேரம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அவர் விசாரணை நடத்தினார். இந்த வழக்கை கண்காணிக்கும் கண்காணிப்பு அதிகாரியான ஐ.ஜி காமினி நேற்று காலை 9.30 மணியளவில் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. காமினி ஆகியோர் காலை 10 மணியளவில் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்குச் சென்றனர்.

தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி காமினி முன்னிலையில் மாவட்ட பெண் கலெக்டரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், தீவிர விசாரணை மேற்கொண்டார். இதில் செல்போனில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி என்ன? எம்.எல்.ஏ மூலம் கொடுக்கப்பட்ட தொந்தரவுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு அதை அறிக்கையாக தயார் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பெண் ஐஏஎஸ் அதிகாரியும் அவரது கணவரும் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணைக்குப் பின் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் எண்-1 சுவாதி அழகப்பனிடம் வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினமே எம்.எல்.ஏ கைது செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாயின. இருப்பினும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இன்று மாலை எஸ்.பி சிருஷ்டிசிங் தலைமையிலான போலீஸார், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இல்லத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரைக் கைது செய்து, தியாகதுருகம் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது: "முதல்வர் விஜய் நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்"- இபிஎஸ்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக...

திருப்பரங்குன்றம்: "தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி"- நயினார்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச...

திருப்பரங்குன்றம்: "பிடிவாதத்தை கைவிட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்"- அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச...

"தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கும், ஆனால்…"- அன்புமணி ராமதாஸ் சொல்வதென்ன?

``தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் தொகுதி மறுவரையறை மசோதாவை பாமக...