22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' – பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

Date:

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு டெல்லி செல்வது, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

“தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

`பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது’ என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

ஸ்டாலின்

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றால் அபராதம்!' – அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை...

ஜெம் வீரமணி வழக்கு: "திமுக-வும், தவெக-வும் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல்..!"- வானதி சீனிவாசன்

"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர்...

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6...

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு...