19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு – யார் அந்த மூவர்?

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், தனது மகனை கட்சிக்குள் முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துவதாக கூறப்படும் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம்.

மிதுன் – எடப்பாடி பழனிசாமி

மிதுன் – எடப்பாடி பழனிசாமியின் மகன்

அதிமுகவில் எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பிலும் இல்லாத மிதுன், கட்சியின் முக்கிய முடிவுகளில் மறைமுக செல்வாக்கு செலுத்துவதாக சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆட்சிக் காலத்திலும், எதிர்க்கட்சி காலத்திலும் கட்சி தொடர்பான பல முடிவுகளில் அவரது ஆலோசனைகள் இடம்பெற்றதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமீபத்தில் அதிமுக உள்கூட்டம் ஒன்றில் மிதுனை கட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எடப்பாடியிடமே முன்வைக்கப்பட்டதாகவும், அதனை கேட்ட எடப்பாடி பெரியதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் கூட தகவல் வெளியானது.

வெங்கடேசன் – எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர்

எடப்பாடி பழனிசாமியின் மனைவியின் சகோதரரான வெங்கடேசன், கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். ஆனால் சேலம் மாவட்ட அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்டவராகக் கருதப்படுகிறார்.

மாவட்ட நிர்வாகிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ பொறுப்பு இல்லாவிட்டாலும் மாவட்டச் செயலாளர் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

வெங்கடேசன்
வெங்கடேசன்

ஏ.டி. சசி பிரபு – குடும்ப உறவினர்

எடப்பாடி பழனிசாமியின் குடும்ப உறவினரான ஏ.டி. சசி பிரபு, தற்போது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக உள்ளார். அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்ததாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இவரும் கட்சிக்குள் செல்வாக்கை அதிகரித்து வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

சசி பிரபு
சசி பிரபு

இந்த மூவரைத் தவிர எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கட்சி நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும், தற்போது அதிகம் பேசப்படும் பெயர்கள் இந்த மூவர்தான் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' – அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது....

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில்,...

`மக்கள் முதுகில் குத்தாதீர்கள்’ – எம்.எல்.ஏ வழக்கில் புதுச்சேரி அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

`வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து!’புதுச்சேரி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்...