29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' – விஜய் கண்டனம்

Date:

கரூரில் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

தவெக தலைவர் விஜய்

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது.

அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, தவெக, அதிமுக என மூன்று...

"நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக...

`படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' – கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report

பட்டினப்பாக்கத்தில் முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரேயே தலைமைச் செயலகம் கட்ட முடிவெடுத்திருக்கிறது தமிழக...

சபரிமலை: கடைகளுக்கான இ-டெண்டரைச் சீர்குலைக்க தேவஸ்வம் ஊழியர்கள் சதி; கோபமான அமைச்சர்; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில்...