29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

`படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' – கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report

Date:

பட்டினப்பாக்கத்தில் முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரேயே தலைமைச் செயலகம் கட்ட முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. புதிய தலைமைச் செயலகத்துக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து அரசாணையும் வெளியாகிவிட்டது. இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக் கூடாதென மீனவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

மீனவர்கள் போராட்டம்

எண்ணூர் தொடங்கி மகாபலிபுரம் வரையிருக்கும் மீனவ கிராம மக்கள் பட்டினப்பாக்கத்தில் கூடி கருப்புக் கொடியை பறக்கவிட்டு அரசுக்கு எதிராக இன்று போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதுமிருந்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.

முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரே கடலுக்கு பக்கமாக புதிய தலைமைச் செயலகம் என்பது மீனவர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்திருக்கிறது. இன்று மீனவர்கள் போராடிய இடத்தை கடற்கரையில் நின்று பார்த்தால் இடது பக்கத்தில் கருப்புக் கொடிகளுடன் போராட்டப் பந்தலும் வலது பக்கத்தில் பன்னடுக்கு கட்டடத்தில் உள்ள முதல்வரின் அலுவலகமும் ஒரே சட்டகத்தில் அடங்கி தெரியும்.

மீனவர்கள் போராடும் இடமும் முதல்வரின் அலுவலகம் இருக்கும் பன்னடுக்கு கட்டடமும்
மீனவர்கள் போராடும் இடமும் முதல்வரின் அலுவலகம் இருக்கும் பன்னடுக்கு கட்டடமும்

மீனவர்கள் கோபமடைய இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. ‘தலைமைச் செயலகம் கட்ட கிண்டியிலும் கோயம்பேட்டிலும் இடமில்லையா? எதோ ஜோசியக்காரர் சொன்னார் என்பதற்காக கடலை பார்த்ததை போல கட்டி மீனவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டுமா?’ என போராட்டத்தில் பேசும் மீனவர்கள் சீறுகின்றனர்.

‘1980 களில் கடற்கரையை அழகுப்படுத்துகிறேன் என எம்.ஜி.ஆர் எங்கள் மீது கைவைத்தார். வீதியில் இறங்கி ஓயாமல் போராடினோம். காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. 17 ரவுண்ட்டுகள் மீனவர்களை நோக்கி எம்.ஜி.ஆர் போலீஸ் சுட்டது. 7 மீனவர்கள் குண்டடிப்பட்டு இறந்தனர். அப்படியிருந்தும் நாங்கள் தீரத்தோடு போராடி வென்றோம். இந்த பதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராகவும் அதே தீரத்துடன் போராடுவோம். 10% க்கு அதிமான வாக்கு வங்கியை கொண்ட சமூகம் எங்களுடையது. விஜய் எங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.

கருப்புக் கொடியோடு மீனவர்கள்
கருப்புக் கொடியோடு மீனவர்கள்

போராட்டப் பந்தலில் மீனவப் பெண்கள் நிறைந்திருந்தனர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். ”காசு கொடுக்காமல் சூனியம் வைத்துக் கொண்டதை போல இருக்கிறது. மாற்றம் வேண்டுமென தவெகவுக்கு வாக்களித்தோம். விஜய் மீனவர்களின் வாழ்வாதாரத்திலேயே கை வைக்கிறார். என்னுடைய அண்ணன், தம்பி என குடும்பமே கடலோடிகள். அவர்கள் கடலுக்கு போய் பிடித்து வரும் மீனை நாங்கள் கரையில் கடை பரப்பி விற்போம். இந்தக் கடல்தான் எங்களுக்கு எல்லாமே. தலைமைச் செயலகத்தை கொண்டு வந்தால் எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த நினைப்பார்கள். எங்களின் குடியிருப்புகளே பாழடைந்து கிடைக்கின்றன. அதை முதலில் சரி செய்து கொடுங்கள்.

மீனவப் பெண் சகாயம்
மீனவப் பெண் சகாயம்

சுறா படத்தில் மீனவனாக மீனவ நண்பனாக நடித்திருந்தார். மீனவ ஜனங்களுக்கு வீடுகட்ட போராடுவார். ஆனால், நிஜத்தில் இப்படி மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறாரே’ என்றார் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சகாயம் என்கிற பெண்.

தொகுதியின் தவெக எம்.எல்.ஏவும் அமைச்சருமான வெங்கட்ரமணனை காணவில்லை என போஸ்டர் அடிக்கப் போவதாகக் கூறும் மீனவப் பெண் ஷாலினி, ‘புதிய தலைமைச் செயலகத்தை எங்களின் இடத்தில் கட்டக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் கூடி போராடுகிறோம். எங்களின் வாழ்வாதாரம் இந்த கடலை நம்பிதான் இருக்கிறது. நீதிமன்ற நீதிபதிகள் இந்த இடத்தை கடந்து செல்கையில் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்பதற்காக எங்களின் கடைகளை அப்புறப்படுத்த நினைத்தார்கள். அதற்கே நாங்கள் போராடியிருக்கிறோம். இப்போது இங்கே தலைமைச் செயலகம் வந்தால் பாதுகாப்புக்கு எனக் கூறி எங்களின் வாழ்வாதாரத்தையே சீரழித்து விடுவார்கள்.

மீனவப் பெண் ஷாலினி
மீனவப் பெண் ஷாலின்

மேலும், அந்த இடம் எங்களின் குடியிருப்புகளுக்கான இடம். நாங்கள் ஏற்கனவே இருக்கும் குடியிருப்புகள் இடிந்து பெயர்ந்து வாழவே தகுதியில்லாத நிலையில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட குடியிருப்பு கட்டடம் இடிந்து ஒருவர் படுகாயமடைந்தார். எங்களுக்கான அடிப்படை தேவைகளே இங்கே முறையாக இல்லை. அதை எந்த ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இதுவரைக்கும் ஆண்டவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். தவெக ஒரு மாற்றமாக இருக்கும் எனக் கூறி எங்கள் கிராம மக்களை தவெகவுக்கு வாக்களிக்க வைத்தேன். இப்போது தவெகவுக்கு வாக்களித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ வெங்கட்ரமணன் இத்தனை போராட்டம் செய்தும் எங்களை வந்து பார்க்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் வந்தார். ஜெயித்த பிறகு ஆளையே காணோம். அவரை காணவில்லை என போஸ்டர் அடிக்கப் போகிறோம்’ நம்பிக்கை நகர் மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஶாலினி.

‘நீங்களே நாங்கள் வசிக்கும் இந்தப் பகுதியை சுற்றிப் பாருங்கள். சுற்றி எல்லா பக்கமும் சாக்கடையாக இருக்கும். 1965 இல் எங்களுக்கு குடியிருக்க கட்டடம் கட்டிக் கொடுத்தார்கள். அந்தக் கட்டடமெல்லாம் இடியும் நிலையில் இருக்கிறது. மாடிப்படி இடிந்து விழுந்து என்னுடைய தம்பி மருத்துவமனையில் இருக்கிறான். எந்த ஆட்சியாளரும் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது விஜய்யும் எங்களின் இடத்தை சூறையாட பார்க்கிறார். வாக்குக்காக எங்களை பயன்படுத்திவிட்டு குப்பையாக தூக்கி எறிய நினைக்கின்றனர். நாங்கள் ஓயமாட்டோம், போராடுவோம்.’ என்கிறார் ஷர்மிளா என்கிற மீனவப் பெண்.

மீனவப் பெண் ஷர்மிளா
மீனவப் பெண் ஷர்மிளா

‘1963 இல் இதே பட்டினப்பாக்கத்தில்தான் பிறந்தேன். இந்த கடலும் கடற்கரையும்தான் எங்களின் வாழ்வாதாரம். இன்னமும் பாருங்கள் வீடில்லாத நிறைய மீனவர்கள் கடற்கரையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் கடற்கரையில்தான் நாங்கள் படகை நிறுத்தியிருப்போம். இங்கேதான் எங்களின் வலைகளை பின்னுவோம். மாப்பு (மீன்களின் இருப்பு) இருக்கிறதா என எங்களின் மீனவர்கள் இரவெல்லாம் கூட கடற்கரையிலேயே உட்கார்ந்து நோட்டம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாப்பு தென்பட்டவுடன் கடலுக்குள் இறங்குவார்கள். உங்களால் முடிந்தால் எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சில அடிப்படை உதவிகளை செய்துகொடுங்கள். தலைமைச் செயலகத்தை கொண்டு வந்து இன்னும் துன்புறுத்தாதீர்கள்’ என்கிற வயதில் மூத்த மீனவப் பெண் ஒருவர்.

மீனவர்களின் கொந்தளிப்புக்கு முதல்வர் விஜய் என்ன பதில் வைத்திருக்கிறார்?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக...

சபரிமலை: கடைகளுக்கான இ-டெண்டரைச் சீர்குலைக்க தேவஸ்வம் ஊழியர்கள் சதி; கோபமான அமைச்சர்; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில்...

புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்

புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள்...

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! – விவரம் என்ன?

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து...