4
May, 2026

A News 365Times Venture

4
Monday
May, 2026

A News 365Times Venture

‘இவனுக்கு பெரிய பெரிய கனவுகள் இருக்கு'னு அன்னைக்கு SAC சார் சொன்ன வார்த்தைகள்!' – ரபி பெர்னார்டு

Date:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் வெற்றி பெற்ற சான்றிதழை வாங்கச் சென்றிருக்கிறார்.

இந்தச் சூழலில் லயோலாவில் விஜய்க்கு வகுப்பெடுத்த முன்னாள் எம்.பி.யும் லயோலாவின் முன்னாள் பேராசிரியருமான ரபி பெர்னார்டிடம் பேசினோம்.

ரபி பெர்னார்டு

‘’மீடியாவுக்கு வருவதற்கு முன் நான் சில காலம் லயோலா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தேன். நான் அங்க வேலை பார்த்திட்டிருந்தப்பதான் விஜய்க்கு அங்க அட்மிஷன் போட்டாங்க. அடுத்த சில நாட்களில் ஒரு நாள் விஜய்யின் அம்மா அப்பா சூளைமேட்டில் இருந்த எங்க வீட்டுக்கு விஜயைக் கூட்டிட்டு வந்தாங்க.

அப்ப எஸ்.ஏ.சி சார் சொன்ன வார்த்தைகள் இப்பவும் நல்ல நினைவுல இருக்கு. ‘இவனுக்கு வாழ்க்கையில பெரிய பெரிய கனவுகள் இருக்கு. அதனால சிறந்த ஒரு மனிதனா இவனை உருவாக்கணும்னுதான் இங்க சேர்த்திருக்கோம். நீங்க கைடு பண்ணி வழிநடத்தணும்னு’ என் கையில விஜய் கையைப் பிடிச்சுக் கொடுத்தார்.

தவெக தலைவர் விஜய்

பிறகு அங்கேயே கொஞ்ச காலம் படிச்சார். ரொம்ப அமைதியா இருப்பார். படிச்சிட்டிருக்கிற போதே சினிமா வாய்ப்புகள் அமைஞ்சுட்டதால அதுலயும் கவனம் செலுத்தினார். முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் ஷூட் லயோலாவில் நடந்தது. வகுப்பு முடிஞ்சதும் நேரா அங்க ஷூட்டிங் போவார்.

பிறகு நானும் அந்தக் கல்லூரியில் இருந்து வெளியில வந்துட்டேன். அதனால அதன் பிறகு தொடர்பு இல்லை. ஆனா எங்கயாச்சும் பார்த்தா என்னுடைய புரபசர்னு மரியாதையாப் பேசுவார்.

இன்னைக்கு அவர் படிச்ச, படிச்சிட்டிருக்கிற போதே முதல் படத்துல நடிச்ச அதே கல்லூரியில வெற்றிச் சான்றிதழை வாங்கி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா பதவியேற்கப் போறார்னு நினைக்கிறப்ப எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு. ” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போடி: கைகொடுத்த உள்ளூர் செல்வாக்கு; அதிமுக-வின் `கோட்டை'யில் திமுக-வின் ஓபிஎஸ் சாதித்தது எப்படி?

தமிழக அரசியலில் 'அமைதிப் படை'யாக அறியப்பட்டு, ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர்...

'அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன், நான் எனது மனச்சாட்சிப்படியே.!' – ஸ்டாலின் உருக்கம்

234 சட்டமன்றத் தேர்தல்களில் தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தத்...

கூட்டணி அமைத்ததில் வெற்றி; ஆனால், தொகுதியில் 'தோல்வி' – 'கை'கூடாத செல்வப்பெருந்தகை வெற்றி

காஞ்சிபுரத்தின் தனித் தொகுதியான ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை....

'சந்திரபாபு நாயுடுவை இறக்கிய என்.டி.ஏ' – ஒரே ரவுண்டில் ஆனந்துக்கு தி.நகரை வென்று கொடுத்த விஜய்!

தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியில் கிட்டத்தட்ட 13,000...