8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

Date:

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இதில் வீடு அல்லது மனைப் பத்திரப்பதிவில் மத்திய அரசு விதிகளைச் சற்று எளிதாக்கி உள்ளது.

இதுவரை, வீடு அல்லது மனையை ரூ.10 லட்சத்திற்கு மேல் வாங்கி, பத்திரப்பதிவு செய்தால் விற்பவர் மற்றும் வாங்குபவர்கள் தங்களது பான் கார்டு தகவலை வழங்க வேண்டும்.

ஆனால், வரும் 1-ம் தேதிக்குப் பின், ரூ.20 லட்சத்திற்கு மேல் வீடு அல்லது மனை வாங்கினால் தான் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.

பான் கார்டு

இது சின்ன சின்ன ரியல் எஸ்டேட் விற்பனைகளை எளிதாக்கவும், ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

மேலும், முன்பு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போது இருந்த நிலத்தின் மதிப்பு வேறு, இப்போது இருக்கும் மதிப்பு வேறு. அதனால், அதற்கேற்பவும் இந்த மாறுதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பான் கார்டு சமர்ப்பிக்கும்போது, இன்னும் சில வேலைகள் அதிகரிக்கும். ஆனால், இப்போது அது குறையும். இது பத்திரப்பதிவுகளை வேகமாக்கும் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இது எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: “2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க…" – எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே…' – திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும்...

மும்பை: சுழற்றியடித்த புயல்; அவசரமாகத் தரையிறங்கிய ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

மும்பையில் நேற்று திடீரென சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கூரை வீடுகளில்...

புதிய அரசு: காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில், தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை, குழப்பமான கூட்டணிக்...