8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

ஆடுறா ராமா… ஆடுறா! – மீண்டும் அரங்கேறுகிறதா ஆளுநரை வைத்து `அரசியல்' ஆட்டம்? – Vikatan Cartoon

Date:

ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தின் தற்போதைய நிலைதான் அதற்குக் காரணம்!

திமுக Vs அதிமுக என்றிருந்த களம், தவெக என்ற கட்சியின் வரவால்… எக்குத்தப்பாக மாறிக் கிடக்கிறது. சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தவெக-வால் ஆட்சியமைக்க முடியாமல் இருக்கவே… நொடிக்கு நொடி மாறும் `கா(க)ட்சிகளுடன் களேபரக் காடாக தகித்துக் கொண்டிருக்கிறது `தமிழ்நாடு!’

விஜய் – அர்லேக்கர்

தற்போதைய சூழலில், 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரங்கேறிய அரசியல் சம்பவங்கள் நமக்கு நிச்சயம் நிழலாடும். 2017-ல் அதிமுக-வில் நடைபெற்ற அதிகார யுத்தத்திலும், அரியணைப் போட்டியிலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, `ஆளுநர்’ மூலம் நடத்தியதையெல்லாம் நாடறியும்!

2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவால் பதவியேற்பு செய்து வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2017-ல் ஓ.பி.எஸ்., – சசிகலா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டபோது, கட்சிக்குள் சசிகலாவுக்கு ஆதரவாக அனைத்தும் இருந்தும், சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை. இதற்கான காரணமாக, அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை காத்திருந்ததும், மாநில அரசியல் நிலைத்தன்மையை மதிப்பீடு செய்ததும் கூறப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா

பின்னர் 2017 பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவை குற்றவாளியாக அறிவித்தது. இதன் காரணமாக அவர் முதலமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சசிகலாவால் முன்மொழியப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், ஆளுநர். மேலும், 15 நாள்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்டது. பிப்ரவரி 18-ம் தேதியன்று, பழனிசாமியும் அப்படியே செய்து, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

`பாஜக இந்தியாவின் பிற மாநிலங்களில் செய்ததை, நம் மாநிலத்தில் செய்ய முயன்ற டாஸ்க்கே… ஆளுநரை வைத்து ஆடிய பொம்மலாட்டம்’ என அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் விகடன் வெளியிட்டிருந்த கார்ட்டூன், சூழ்நிலையைக் கண்ணாடிபோல பிரதிபலிப்பதாக இருந்தது.

Vikatan Cartoon
விகடன் கார்ட்டூன் – Vikatan Cartoon

2017-ல் தமிழ்நாடு எதிர்கொண்ட அதே நிலை மீண்டும் ரிப்பீட்டாகிறது! அன்று அதிமுக-வுக்குள் ஆளுநரால் நடந்தது, இன்று `திமுக – அதிமுக – ஆளுநர்’ என்ற முக்கோண ரீதியில் நடக்கிறதா என்கிற கேள்வி, அரசியல் அரங்கில் எழுகிறது!

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெக-வுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல், ஆளுநர் நகர்த்தும் பவர் கேம், திமுக – அதிமுக-வை சூழலில் சுற்ற விட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஆளுநரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆளுநரின் இந்த இழுபறிக்கு பின்னால் பாஜக இருப்பதாக அரசியல் தலைவர்கள் பலர் விமர்சனம் செய்துவருகின்றனர். பாஜகவின் அழுத்தத்தால் தான் ஆளுநர் பதவியேற்க அனுமதி தர மறுக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணியில் பயணிக்கும் கமல்ஹாசன், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் என பலரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

தனிப்பெரும் கட்சியாக விஜய் உருவெடுத்தபோதிலும் பதவியேற்புக்காகத் தற்போது பந்தாடப்பட்டு வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

https://www.vikatan.com/government-and-politics/vijay-being-tossed-around-over-swearing-in-is-bjp-pressuring-the-governor

உச்ச நீதிமன்றம்

ஆளுநர் செய்ய வேண்டியது என்ன?

https://www.vikatan.com/government-and-politics/r-kannan-explains-what-the-governor-should-do-regarding-vijay-taking-oath-as-chief-minister

சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு, சில எம்.எல்.ஏ-க்களிடம் த.வெ.க-வுக்குப் போவது குறித்து தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள்.

இது தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி எங்கள் எம்.எல்.ஏ-க்களை புதுச்சேரியில் தங்கும்படி உத்தரவிட்டார். த.வெ.க-வுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்று அழுத்தமாகக் கூறி வரும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அந்த விடுதியில்தான் இருக்கிறார்.

https://www.vikatan.com/government-and-politics/the-background-behind-the-gathering-of-admk-mlas-at-the-puducherry-resort

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இச்சந்திப்பின் போது, “தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லை என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விளக்கிக் கூறினார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

https://www.vikatan.com/government-and-politics/majority-not-confirmed-governors-side-explanation-tvk

திமுக நிர்வாகிகள் கூட்டம்
திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

https://www.vikatan.com/government-and-politics/a-resolution-was-passed-at-the-meeting-of-dmk-functionaries-vesting-the-authority-to-make-decisions-in-dmk-president-stalin

துரை வைகோ

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது; மேலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும்!

https://www.vikatan.com/government-and-politics/durai-vaiko-has-criticized-the-governors-actions-on-his-x-page

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் த.வெ.க தலைவர் திரு சி.ஜோசப் விஜய் அவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.

ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பிஜேபி கடைபிடித்து வருகிறது.

https://www.vikatan.com/government-and-politics/cpm-urges-governor-to-invite-vijay-to-form-government

விஷால்

“2017/18-ம் ஆண்டுகளில் கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் மிக முக்கியமாக கர்நாடகாவில் நடந்த அதே சூழலைத்தான் இங்கும் பார்க்கிறோம். அங்கு முதலில் அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதன் பின்னரே சட்டமன்றத்தில் `பெருமதிப்பை நிரூபிக்க’ (Floor Test) வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே முறையில், தமிழக ஆளுநர் ஏன் தளபதி விஜய் அவர்களுக்கு அரசு அமைக்க வாய்ப்பளிக்கத் தயங்குகிறார்? மக்களின் தீர்ப்பிற்கு அளிக்கப்படும் மரியாதை இதுதானா? தமிழக வெற்றிக் கழகம் கிட்டத்தட்ட பெரும்பான்மை இடங்களைப் பிடித்து இவ்வளவு பெரிய மக்கள் ஆணையைப் பெற்ற பிறகு, நமக்குத் தேவை ஒரு அரசாங்கமே தவிர, ஆளுநர் ஆட்சி அல்ல.

https://www.vikatan.com/government-and-politics/actor-vishal-has-criticized-the-governor-for-not-inviting-the-tvk-to-form-the-government

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது.

https://www.vikatan.com/government-and-politics/selva-perunthagai-slams-governor-over-delay-in-tvk-invite

https://www.vikatan.com/government-and-politics/manickam-tagore-criticizes-the-governor-for-not-inviting-the-tvk-to-form-the-government

ஸ்டாலின் - கமல்ஹாசன்
ஸ்டாலின் – கமல்ஹாசன்

இது மாநிலத்திற்கு நேரும் அவமானம். மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

https://www.vikatan.com/government-and-politics/governance/kamal-haasan-condemns-governor-delay-vijay-tvk-government-formation-tamil-nadu-election-results

நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்…

ஆனால் விஜய் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளார். சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

https://cinema.vikatan.com/kollywood/prakash-raj-about-the-governor-not-granting-permission-for-vijay-to-assume-office

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதிய அரசு: காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில், தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை, குழப்பமான கூட்டணிக்...

'ஆளுநரின் வழி நிகழும் ஜனநாயகப் படுகொலை!' – குழியில் தள்ளப்படும் மக்களின் அதிகாரம்!

ஆளுநர் தன் பதவியின் அதிகாரத்தையும் வரையரையையும் ஜனநாயகத்துக்கு சவால்விடும் போக்கு இந்தியாவின்...