26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

“இனி இந்தியா உடன் மோதல் ஏற்பட்டால்..'' – பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க IMF போட்ட 11 நிபந்தனைகள்

Date:

இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிர மோதல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கிட்டதட்ட 1 பில்லியன் டாலரைக் கடனின் ஒரு பகுதியாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், கடனின் மற்றொரு பகுதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்க பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

அவர்கள் கூறியிருப்பதில் சில…

இந்தியா உடனான பாகிஸ்தானின் உறவு இன்னும் மோசமானாலோ அல்லது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல்போக்கு எதாவது ஏற்பட்டாலோ, நாட்டின் நிதி, வெளியுறவு, சீர்திருத்த இலக்குகளுக்காக கொடுக்கப்படும் இந்தக் கடனின் நோக்கத்திற்கு ஆபத்தாக முடிந்துவிடும்.

ரூ.17.6 டிரில்லியன் புதிய பட்ஜெட்டிற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மின்சார கட்டணங்களில் கடன் சேவைக்கான கூடுதல் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர்

மூன்று ஆண்டுகளுக்கு மேலான பழைய கார்களின் இறக்குமதி தடையை நீக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் படி, அரசு ஒரு செயல் வடிவத்தை உருவாக்க வேண்டும்.

இப்படி நிதி, விவசாயம், எரிசக்தி, அரசியல் நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை அடுக்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள கடனில் ஏற்கெனவே இருந்த நிபந்தனைகளுடன் இப்போது போடப்பட்ட 11 விதிமுறைகளை சேர்க்கும்போது, மொத்தம் 50 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஸ்டாலினும் ஒருவர்..!" – CJP அபிஜித் தீப்கே

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின்...

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி...

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை...

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்...