6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

இடைத்தேர்தல்: “எந்த விறுவிறுப்பும் இல்லாமல் நடக்கிறது..!" – தமிழிசை சௌந்தரராஜன்

Date:

பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நடைபெற்று வரும் இடைத்தேர்தல் எந்தப் பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்த அதே ஆர்வம் இடைத்தேர்தலில் காணப்படவில்லை. மீண்டும் மீண்டும் தேர்தல்களைச் சந்திக்க வேண்டுமா என்ற சுணக்கமே மக்களிடம் நிலவுகிறது. தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடம் வந்து வாக்கு கேட்பது சரியான அணுகுமுறை அல்ல. மக்கள் மீது இது போன்ற தேர்தல்களைத் திணிக்கக் கூடாது. மக்கள் அளிக்கும் தீர்ப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும். இதை முதல்வர் விஜய் உணர்வார் என நம்புகிறேன்.

India Bloc March

தனது 16 வயது பெண் குழந்தையைக் கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் சென்ற தந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குத் தந்தையர்களே பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் ஆட்டம் கண்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் ‘எஸ்.ஐ.ஆர்’ (SIR) விவகாரத்தில் இந்தியா கூட்டணி நடத்தி வருவது, வெற்றி பெற முடியாதவர்களின் தோல்வி பேரணி. காங்கிரஸும், த.வெ.க-வும் எஸ்.ஐ.ஆர்க்குப் பிறகுதான் வெற்றிகளைப் பெற்றுள்ளன.

எஸ்.ஐ.ஆர்க்கு எதிராகப் போராடுபவர்கள் தங்கள் சொந்த வெற்றிக்கே எதிராகப் போராடுவதற்குச் சமம். காங்கிரஸை நம்பிச் செல்பவர்கள் யாரும் உருப்பட முடியாது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர் பங்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. அமைச்சர்களின் பேச்சுவார்த்தைப் பயணங்களும் ரத்து செய்யப்படுகின்றன. காங்கிரஸோடு பயணித்தால் தோல்வி கதையைத்தான் எழுத முடியும். மேலும், இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அறிவிக்கப்படும் கவர்ச்சித் திட்டங்களை விட, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதே முக்கியம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தவெகவுக்கு ஆதரவு என்பது வாசனின் முடிவு; நான் அரசை விமர்சிப்பது வேறு!" – சொல்கிறார் தமிழருவி மணியன்

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தன்னுடைய காமராஜர் மக்கள்...

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' – தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில்...

' எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.!' – என்ன சொல்கிறார் மனோ தங்கராஜ்?

நேற்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில்...

India Bloc March: ராகுல் தலைமையில் கூடிய எதிர்க்கட்சியினர்; பரபரப்பான டெல்லி… பங்கேற்காத திமுக!

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர...