22
November, 2026

A News 365Times Venture

22
Sunday
November, 2026

A News 365Times Venture

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' – தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

Date:

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது!

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் “தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் மீனவ சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், மீனவ சமூகத்தினருக்கான முக்கியத்துவமும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் தி.மு.க-வில் கிடைப்பதில்லை. தூத்துக்குடி தொகுதியில் 90,000 மீனவர்கள் வசித்துவரும் நிலையில் அந்த மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், மேயர், கட்சி மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் மாற்று சமூகத்தினர்தான் இருக்கிறார்கள்.

அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

நீண்டகாலமாகவே கொதிப்பிலிருந்து மீனவ சமூக மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு அந்த சமூக வாக்குகள் சென்றுவிட்டன. தூத்துக்குடியில் வென்ற ஸ்ரீநாத்துக்கு த.வெ.க தலைமை மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியிருப்பதால் மீனவ சமூக மக்களுக்கு த.வெ.க பக்கம் சாய்ந்துவிட்டனர். இது தூத்துக்குடி தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.”

தொடர்ந்து பேசியவர்கள், “தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி-யின் நாடாளுமன்றத் தொகுதியில் இப்படியொரு சூழல் நிலவுவதை தி.மு.க தலைமையும் விரும்பவில்லை. தூத்துக்குடி தொகுதியை சிறப்பாக பார்த்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் தோல்வியடைகிறார் எனில் நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி வெல்வது சிக்கல்தான் என்ற கருத்தும் உருவாகியிருக்கிறது. திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் தோல்வியடையும் சூழல் எழுந்தபோது த.வெ.க நிர்வாகி அஜிதாவை தி.மு.க இணைத்து பிரசாரம் செய்ய வைத்தார். இறுதியில் 6 ஆயிரம் வாக்குகளில் வென்றார். எனவே சமூக பிரநிதித்துவத்தை உறுதிசெய்யும் பொருட்டு மீனவச் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மறுசீரமைப்பில் முன்னுரிமை வழங்கும் திட்டம் தயாராகி வருகிறது” என்றனர்

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்ட மீனவரணி நிர்வாகிகளிடம் பேசினோம், “தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் 70 வயதை கடந்துவிட்டதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார். தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை பெற அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களும் முயற்சித்து வருகிறார்கள். மீண்டும் மீண்டும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்காமல் திருச்செந்தூர் தொகுதியை உள்ளடக்கிய தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவியை மீனவச் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அவ்வாறு பிரதிநித்துவம் கொடுத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலும் தி.மு.க வெற்றிபெற முடியும்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அளிக்கப்பட வேண்டிய...

`கள்ளக்குறிச்சி MLA ஆபாச தகவல் அனுப்பியது பணியிட துன்புறுத்தல் இல்லையா?' – நீதிபதி விக்டோரியா கௌரி

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக...

’எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செங்கோட்டையன் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்....

டாக்டராக மாறிய செக்யூரிட்டி; ஓ.பி சீட் வழங்கும் தூய்மை பணியாளர் – கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவலம்

"அரசு மருத்துவமனை என்பது ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் கோயில்"...