27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

"இங்கு நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம், அமைச்சர் சம்பந்தமே இல்லாமல்.!" – உதயநிதி, சிடிஆர் வாதம்

Date:

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ” மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா அரசு பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது.

அங்கே எல்லா கட்சியினரும் ஒரே எண்ணத்தோடு நிற்கின்றன. ஆனால், இங்கே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையே கூட்டவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சிடிஆர் நிர்மல் குமார்

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், ” எங்கள் முதல்வர் கடந்த 3 வருடங்களாக யாரையும் பார்த்து பயப்படவில்லை. எந்தவிதத்திலும் அவர் பயப்படவில்லை. நாளை தொகுதிமறுவரை குறித்து பேச அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தை எங்கள் முதல்வர் கூட்டியிருக்கிறார். தமிழக உரிமைக்காக கூட்டியிருக்கிறார். அதில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறுமாறு எதிர்க்கட்சி தலைவரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதற்கு மீண்டும் எழுந்து பதிலளித்த உதயநிதி, ” இங்கு நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம். ஏன் தண்ணீர் வரவில்லை. எப்போது வரும்? அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டுவீர்கள் என்று கேட்கிறேன். பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்கிறேன். அதற்கு சம்பந்தமே இல்லாமல் அமைச்சர் பதில் அளித்து திசைத்திருப்பி கொண்டிருக்கிறார்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் அலுவலகம்...

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க...

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச்...