27
May, 2026

A News 365Times Venture

27
Wednesday
May, 2026

A News 365Times Venture

ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய விசிக; மல்லுக்கட்டிய திமுக! – குன்னத்தில் நடந்தது என்ன?

Date:

தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க ஆட்சியமைக்க உதவியதோடு, த.வெ.க அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இது, தி.மு.க-வினரை கடுமையாக விமரசிக்க வைத்தது. பலரும் சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி-யுமான ஆ.ராசா சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள், சர்ச்சைக்கு வித்திட்டது. அவரது கருத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

சலசலப்பு

பெரம்பலூரில் ஆ.ராசாவின் அலுவலகத்தை சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அதனைத் தடுத்தனர். இந்நிலையில், குன்னம் பேருந்து நிலையத்தில் கடந்த 23 -ம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆ.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.

அதற்கு காவல்துறை முதலில் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கண்டித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில், இரு தரப்புக்கும் காவல்துறை அனுமதி தரவில்லை. குன்னம் பேருந்து நிலையத்தில் இன்று ஆ.ராசாவைக் கண்டித்து அந்தப் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்து தி.மு.க-வினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

attack

இதனால், இரு கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் பிறகு அது மோதலாக மாறியது. இரு தரப்பும் கற்கள், கம்புகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். அதைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள், தி.மு.க-வினருக்கு இடையில் மோதல் வெடித்த சம்பவம், குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகதாது விவகாரம்: “உதயநிதி ஸ்டாலின் ஏன் Silent Mode-ல் இருக்கிறார்?" – மாணிக்கம் தாக்கூர் MP கேள்வி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்கு...

டெல்லி செல்லும் முதல்வர் விஜய்; பிரதமரிடன் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன? | News Today Live Update

பசுவதை: அவசரமாக விசாரிக்க முடியாதுதமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல்...

ராஜினாமா செய்யும் அதிமுக MLA-க்களை தவெக-வில் சேர்க்க எதிர்ப்பு; காங்கிரஸ் பெண் நிர்வாகி பதவி விலகலா?

கோவையைச் சேர்ந்த ஸ்ரீ நிதி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தேசிய செயலாளராக...

‘முதலமைச்சர் விஜய்யை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது’ – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....