18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

“அ.தி.மு.க – தி.மு.க உறவை அம்பலப்படுத்தும் ப்ளான்.!” – த.வெ.க தலைமை வியூகம்!

Date:

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவும், தி.மு.க-வும் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க- தி.மு. க கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்ட செய்தியை பெரிதுபடுத்த த.வெ.க திட்டமிட்டுள்ளது. 

வில்லிவாக்கத்தில் கடந்த 14-ம் தேதி நடந்த தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ தேர்தல் முடிவு வெளியான இரவே, எடப்பாடி மகன் மிதுன், முன்னாள் துணை முதல்வர் உதயநிதியை தொடர்பு கொண்டு பேசினார். இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து பேசப்பட்டது. இதற்கு ஒரு தொழிலதிபர் ஒருவரும் உதவி செய்தார்” என்று பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.

ஆதவ் அர்ஜுனா தவெக

 ஏற்கனவே அ.தி.மு.க விலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்படும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினரும் இதே குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அ.தி.மு.க தலைமை மற்றும் தி.மு.க தலைமை இருவருமே, இந்த செய்தியை கடந்து போய்விடுகிறார்கள்.

மற்றொருபுறம், சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி “புஷ்பா பட பாணியிலான சோஃபா அரசு… இந்த அரசு மைனாரிட்டி அரசு” என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது சமூக வளைத்தளங்களில் பேசு பொருளானது. 

இந்நிலையில் தங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் தி.மு.கவுக்கு செக் வைக்கவும், அ.தி.மு.க தரப்பை அமைதிபடுத்தவும் த.வெ.க தலைமை திட்டம் வகுத்து வருகிறது. இதற்காக புதிய யுக்தியை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து த.வெ.க-வுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசும் போது “த.வெ.க -வை தனிமைப்படுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.கவும், தி.மு.க வும்  பல திட்டங்களை வகுத்தன. அதெல்லாம் எங்களுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது உண்மை.

ஆட்சிக்கு நாங்கள் வரக்கூடாது என பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க-வை தி.மு.க நாடியிருக்கிறது. ஆனால், எங்களை பி.ஜே.பி பி டீம் என தொடர்ந்து விமர்ச்சிக்கிறார்கள். இந்த யுக்தியை முதலில் காலி செய்ய உள்ளோம். 

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

ஆதவ் அர்ஜுனா இந்த யுக்தியை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். விரைவில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் எந்த வகையில் கைகோர்த்து செயல்பட்டார்கள் என்பதை தொடர்ந்து நாங்கள் வெளியிடுவோம். இதற்காக யாரிடம் பேசினார்கள், மே-8ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட அனைத்தயும் நாங்கள் ஆதரங்களாக மக்கள் முன்னிலையில் வைக்க போகிறோம். 

இதுவரை அ.தி.மு.க -வுடன் கூட்டணி குறித்து தி.மு.க எந்த கருத்தும்  சொல்லவில்லை. அ.தி.மு.கவில் மட்டுமே, அது வெடித்துள்ளது. விரைவில் தி.மு.கவிலும் இந்த பஞ்சாயத்து கிளம்பும். இரண்டு  கட்சிகளும் தங்கள் தேவைக்கு எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்தாலே, இனி இவர்கள் இருவரும் ஆட்சியை பிடிக்கும் கனவை நினைத்து கூட பார்க்க முடியாது. இனி அடுத்தடுத்த நாட்களில் எங்களிடமிருந்து வரும் ஆக்ஷன்கள் இதை செயலாக்கும்” என்கிறார்கள்.

இதனிடையே தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை நடந்ததாகவும் தன்னை முதல்வராக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது. 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' – என்னவாகும் போர் நிறுத்தம்?

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது...

`நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க...

`திமுகவில் பொன்முடி ஓரம் கட்டப்பட்டதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்!’ – பின்னணியை உடைக்கும் அதிமுக

`சிகரெட் பற்ற வைத்து முகத்தில் புகையை ஊதுவார்..’விழுப்புரம் அ.தி.மு.க-வின் தெற்கு நகரச்...

அட்டைப்படம்

Source link