4
June, 2026

A News 365Times Venture

4
Thursday
June, 2026

A News 365Times Venture

`அறிவாலயம் வரும் சிறுத்தைகள்; திமுக க்ரீன் சிக்னல் டு எடப்பாடி Vs வேலுமணி – தொடரும் மோதல்! | கழுகார்

Date:

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் வெற்றியை குறிக்கும் பெயருடைய பெண் அதிகாரியின் வசூல் வேட்டையை கேட்டு உயரதிகாரிகளே ஷாக்காகி இருக்கிறார்களாம்.

செனடாப் சாலை சிபாரிசில் பதவிக்கு வந்த பெண் அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம், ‘மாதந்தோறும் 20 லட்டுகளை திரட்டிக் கொண்டு வாருங்கள்’ என மிரட்டுகிறாராம். டாஸ்மாக் பார்கள் மூலம் கிடைத்த வருமானம் இந்த ஆட்சியில் நின்றுபோனதால், அந்தப் பிரிவிலிருக்கும் போலீஸார், இந்த பெண் அதிகாரியின் மிரட்டலுக்குப் பயந்து வேறு பிரிவுக்குச் செல்ல கமிஷனரிடம் இடமாறுதல் அப்ளிகேஷன் கொடுத்திருக்கிறார்களாம்.

அப்படியிருந்தும்கூட, பெண் அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தயங்குகிறதாம் தூய ஆட்சி. ‘மாற்றம் மாற்றம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க…. இது தான் மாற்றமா? என புலம்பித்தள்ளுகிறது காக்கி வட்டாரங்கள்.

மாண்புமிகுக்கள், தங்களுடைய உதவியாளர்களாக யாரை நியமித்துக் கொள்கிறார்கள் என்பதை முதல்வர் அலுவலகமே நேரடியாக கண்காணிக்க தொடங்கியிருக்கிறதாம். முதல்வருக்கு நெருக்கப்புள்ளிகள் க்ரீன் சிக்னல் கொடுத்தால்தான் உதவியாளர் நியமனம் நடக்கும் என கறாராக சொல்லிவிட்டார்களாம்.

இதனால் சில மாண்புமிகுக்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். குறிப்பாக, மிக மூத்த சீனியர் மாண்புமிகுவுக்கு இந்த நடைமுறையெல்லாம் துளியும் பிடிக்கவில்லையாம்.

அதேபோல, அமைச்சர்கள் பலரும் துறை நடவடிக்கை குறித்த எந்த வித புரிதலும் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள். இதை பயன்படுத்தி் அதிகாரிகள் தரப்பில் சத்தமில்லாமல் லாபி செய்ய ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த முதல்வர் அலுவலகம், அமைச்சர்களுக்கு டிரைனிங் கேம்ப் ஒன்றை சத்தமில்லாமல் நடத்திவிடலாம் என முடிவெடுத்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தையும் கையோடு நடத்தவிருக்கிறார்கள். அதுவரைக்கும் துறைரீதியாக எந்தவொரு பிரஸ்மீட்டும் நடத்த வேண்டாம், அவற்றை சீனியர் அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றிருக்கிறதாம் ஆட்சி மேலிடம். மாண்புமிக்குக்களை கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்களாம்.

த.வெ.க-வின் அழுத்தம், வி.சி.க தொண்டர்களின் விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் த.வெ.க அமைச்சரவைக்குள் நுழையச் சம்மதம் தெரிவித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். இதையடுத்து, தி.மு.க-வுக்கு வர விரும்பும் வி.சி.க-வினருக்கு கிரீன் சிக்னல் கொடுத்தது தி.மு.க தலைமை.

பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனை செல்வன் உள்ளிட்ட பலரையும் தி.மு.க-வுக்குள் இழுக்க, மாஜிக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள்.

திருமாவளவன், விஜய்

இவ்விவகாரத்தை அறிந்த திருமாவளவன், ஸ்டாலினுக்கு நெருக்கமான மாஜி ஒருவரைத் தொடர்புகொண்டு, ‘எங்கள் கட்சியிலுள்ள நிர்வாகிகளை தி.மு.க இணைத்துக்கொண்டால் அது சரியாக இருக்காது. இதுகுறித்து நேரில் வந்து பேசுகிறேன்’ என்றதும் இணைப்பு விழாக்களை கிடப்பில்போட்டது அறிவாலயம்.

இந்நிலையில், ‘அமைச்சரவைக்குள் நீங்கள் வந்தபிறகு அறிவாலயத்துக்கோ, ஸ்டாலின் வீட்டுக்கோ போனால் அது நல்லா இருக்காது…’ என த.வெ.க தரப்பு கேட்டுக் கொண்டதால், தி.மு.க தலைமையை சந்திக்கும் முடிவை கைவிட்டுவிட்டாராம் திருமாவளாவன். ஆகவே, முதலில் பனையூர் பாபு.. அடுத்து ஷாநவாஸ் என அடுத்தடுத்து சிறுத்தை நிர்வாகிகள் அறிவாலயம் செல்ல கேட் ஓப்பன் ஆகியிருக்கிறதாம்.

எடப்பாடி பழனிசாமியும் வேலுமணியும் சமாதானமாகப் போகிறோம் எனக் காட்டிக் கொண்டாலும் பிளவு இன்னும் சீராகவில்லை என வருந்துகிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள்.

எடப்பாடி உத்தரவை மீறி விஜய்க்கு ஆதரவளிக்க வேலுமணி முடிவெடுத்தபோது, ‘நமது அம்மா’ நாளேட்டின் நிறுவனர் பெயர் வேலுமணி என குறிப்பிடப்பட்டிருந்தது. இருதரப்பும் சமாதானமாக போய்விட்ட நிலையில் நிறுவனர் பெயரை எடப்பாடி பழனிசாமி என மாற்றாமல் வேலுமணி, பழனிசாமி என இருவரின் பெயரையும் நிறுவனராக குறிப்பிட்டிருக்கிறது அந்த நாளேடு.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

நமது அம்மா நாளேடு எடப்பாடிக்கு எதிராக திரும்பிய சூழலில் ‘போர்வாள்’ பத்திரிகையை தொடங்கிய எடப்பாடி அதனை தொடர்ந்து நடத்த சொல்லியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. வேலுமணியிடமிருந்து பறித்த பொறுப்புகளை இதுவரை எடப்பாடி திருப்பியளிக்காததால் வேலுமணி தரப்பும் கடுப்பில்தான் இருக்கிறது. இதற்கிடையே, அ.தி.மு.க புள்ளிகளை தி.மு.க பக்கம் கொண்டுவரும் அசைமெண்ட்டை அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளதாம் தி.மு.க தலைமை. நடிகர் கட்சியும் ஆள்தூக்க தீவிரமாக இருப்பதால், அரசியல் களம் பரபரக்கிறது.

த.வெ.க வெற்றிபெற்று செங்கோட்டையன் அமைச்சரானதிலிருந்து, பலரும் அவரைச் சந்தித்து கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவரது வீடு தேடி வருகிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த மோசடி புள்ளி ஒருவர் சந்திக்க வர, விவரம் தெரியாமல் செங்கோட்டையனும் அந்த நபருக்கு சால்வை அணிவித்துவிட்டார். இதனை அ.தி.மு.க ஐடி விங் பூதாகரப்படுத்திய நிலையில், ‘ரெளடிகளுக்கு அடைக்கலம் தருகிறதா த.வெ.க?’ என சமூக வலைதளங்களில் திரி கொளுத்தியிருக்கிறது எதிர்தரப்பு.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதனையடுத்து, முதல்வர் அலுவலகத்திலிருந்து செங்கோட்டையனுக்கு ஒரு ஃபோன் கால் வந்திருக்கிறது. ‘ஜூனியர்கள்தான் தடுமாறி கேலி கிண்டலுக்கு ஆளாகிறார்கள்.. நீங்கள் சீனியர்தானே.. நீங்களும் சர்ச்சையில் சிக்கினால் என்ன செய்வது’ என வருந்தியிருக்கிறார்கள்.

அலெர்ட்டான செங்கோட்டையன் டீம், ஏடாகூடமான ஆட்கள் சந்திக்க வந்தால், ‘அமைச்சர் வீட்டில் இல்லை’ எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்களாம். ‘அமைச்சரின் அரசு வாகனமும் பாதுகாப்பு காவலர்களும் இருக்கிறார்கள் அமைச்சர் வீட்ல இல்லையா.. ரொம்பத்தான் கிராக்கி’ என திட்டிவிட்டு கிளம்பிச் செல்கிறார்களாம் லோக்கல் புள்ளிகள்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஹார்ட் டிஸ்க் மாயம் என மின் வெட்டு பிரச்னையை திசை திருப்ப முயற்சி’ – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

புதுப்பிக்கப்பட்ட கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்...

`என்ன ஜெயிக்க வெச்சதுக்கு நன்றி'- `அமைச்சரே இது உங்க தொகுதி இல்ல' வைரலான ஸ்ரீநாத் வீடியோ; ADMK சாடல்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து த.வெ.க...

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! – உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை...