14
July, 2026

A News 365Times Venture

14
Tuesday
July, 2026

A News 365Times Venture

“அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன" – மாணிக்கம் தாக்கூர்

Date:

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் தொடங்கி, விருதுநகர், குடியாத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாக்களின் ஒரு பகுதியாக, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” மற்றும் “கரைபடியாத கைகள்” ஆகிய பிரசாரங்களின் மூலம் மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் பெருமளவில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழா தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், “ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காமராஜர் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவுத் திட்டத்தையும் தந்தார்.

அமைச்சர் கீர்த்தனா

தற்போது பள்ளிகளில் தேவையில்லாத ஆய்வுகளைத் தவிர்ப்பது மற்றும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளைத் தடை செய்வது போன்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதே வேளையில், போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.

காமராஜர் வழியில் வந்த காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு பள்ளி மூடப்பட்டாலும் அது துக்க தினமாகவே பார்க்கப்படும். அண்ணாமலை மேற்கொள்ளும் அரசியல் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டமிட்ட உத்திகளின் தமிழ் வடிவம். தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னையான காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டப்படுவது விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடும்.

விஜய்யுடன் லயோலா மணி
விஜய்யுடன் லயோலா மணி

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஓரணியில் திரண்டு ஒரே குரலில் பேச வேண்டும். கர்நாடக அரசு மற்றும் அம்மாநில பா.ஜ.க-வினர் அணை கட்டுவதற்கு முயன்றாலும், மத்திய மோடி அரசின் அனுமதி இல்லாமல் அவர்களால் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது. இதில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் நியாயமான உரிமைகளைப் பறிக்க விடாமல் தடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொடர்ந்து முன்னின்று போராடும்.

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டிருப்பது, தகுதியான ஒரு இளைஞருக்கு வழங்கப்பட்டுள்ள நல்லதொரு வாய்ப்பாக கருதுகிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க – ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள்...

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? – உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான...

சிறையில் கவுன்சிலராகப் பதவியேற்ற பா.ஜ.க பிரமுகர்; கேரள அரசியல் வரலாற்றில் முதன் முறை நிகழ்வு!

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. மாநகராட்சி...

"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" – பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100...