13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

அயலக உயர்கல்வித் திட்டம்: "மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" – ஸ்டாலின் காட்டம்

Date:

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை தவெக அரசு சிதைத்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?

திமுக | ஸ்டாலின்

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?

இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

Dravidian Model அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி?

துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே” என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'Confident ah இருங்க, வெற்றி நிச்சயம்னு குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா முதல்வரே?' – எடப்பாடி காட்டம்

"தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு...

சேலம்: ரூ.1,000 கமிஷனுக்கு ஆசை; 7500 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.75 கோடி மோசடி; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளைச் சேர்ந்த சிலர், தாங்கள்...

“முன்பு 246 பள்ளிகள் மூடப்பட்டன; தவெக ஆட்சியில் அப்படி நடக்காது’’ – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 2023-24,...

திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள்...