18
November, 2026

A News 365Times Venture

18
Wednesday
November, 2026

A News 365Times Venture

“அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு திமுகதான்" – மாணிக்கம் தாகூர் காட்டம்!

Date:

கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ-க்களாக இருந்த தமிழக பாஜகவை, தனது ‘மிகச்சிறந்த’ வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதிக்கு சுருக்கி, தமிழ்நாடு மக்களால் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு செல்லப்பட்ட தலைமைக்குச் சொந்தக்காரர் அண்ணன் நயினார் நாகேந்திரன். கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையும்கூட இனி தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், இன்று மேடைக்கு மேடை “நாட்டில் காங்கிரஸை ஒழிப்போம்” என்று சவடால் விடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை!

எல்.முருகன்

2014-ல் பிரதமர் மோடியே ஆரம்பித்து வைத்து, பின்னர் அவரே கைவிட்ட பழைய முழக்கத்தை இப்போது கையில் எடுத்திருக்கும் அண்ணன் நயினார் அவர்களே, தேசிய அளவில் காங்கிரஸ் உங்களை ஏறக்குறையத் தோற்கடித்ததையும், வாக்குத் திருட்டு மற்றும் குளறுபடிகள் மூலமே நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள் என்பதையும் நாடே அறியும்!

உண்மையில் மற்ற கட்சிகளை ஒழிப்பதும், உடைத்துச் சின்னாபின்னமாக்குவதும் பாஜகவின் வாடிக்கை என்பதை இந்திய வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவில் தோளோடு தோள் நின்ற சிவசேனாவை இரண்டாக உடைத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை துண்டாடி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியைக் கூறுபோட்டு, மேற்கு வங்கத்திலும் பிளவை ஏற்படுத்திய பாஜகவின் அரசியல் வரலாறு துரோகமும் சூழ்ச்சியும் நிறைந்தது.

தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அக்கட்சியைப் பல துண்டுகளாகச் சிதறடித்து, 2026 தேர்தலில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்க வைத்தது இதே பாஜகதான். இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’.

அதிமுக – பாஜக

கூட்டணி என்ற பெயரில் மிகச் சாதுவாக மாநிலக் கட்சிகளின் வீட்டிற்குள் நுழைந்து, ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் காசி மாலையையும் ஒட்டியாணத்தையும் பார்த்ததும் கங்கா திடீரெனச் சந்திரமுகியாக உருமாறி, “இந்த மாளிகையும் எனக்குத்தான், இந்த சிம்மாசனமும் எனக்குத்தான், உன்னை அழிக்காமல் விடமாட்டேன்” என்று ஆக்ரோஷம் காட்டுவதைப் போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பாஜக நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது.

அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்பிக்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித் ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது.

இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கருப்புக் கொடி ஏற்றியபோது, “டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பழையபடி ரவுடியிசம் செய்யப் போகிறார்களா? இது திமுகவின் ஏமாற்று வேலை” என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்டி கொடுத்த இதே அண்ணன் நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார்!

நயினார் நாகேந்திரன்

அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், “நியாயமான தொகுதி மறுவரையறை” எனத் திமுகவும் மாறி, முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது. “தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது” என்பார்களே, அது நம்ம அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்!

திமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, “ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது” என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே அண்ணா, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாதது போல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், “திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்” என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா? முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள் மக்கள்—கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள் அண்ணே.” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தவெகவினர் `இதுல எப்படிணே எரியும்?' என்பதை போல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர்"- இபிஎஸ் தாக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அரசாணை இல்லாமல்...

“இன்ஸ்டா ரீல்ஸ் தயாரிப்பவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் அல்ல" – நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை!

Pபத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்பை,...

திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! – நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு...

”கேக் வழங்குவது ஒரு திட்டமா? கேவலம் அது” – விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயனின் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளத்தில் அத்தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார்....