13
August, 2026

A News 365Times Venture

13
Thursday
August, 2026

A News 365Times Venture

‘ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய தவறான கணக்கு!’ – ஈரான்

Date:

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், ‘போர் தீவிரமடைகிறது…’, ‘ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்’, ‘விரைவில் போர் முடிந்துவிடும்’ என்று ஒவ்வொன்றைக் கூறி வருகிறார்.

ஆனால், இது எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

ஈரானும் அமெரிக்காவிற்குப் பிடிக்கொடுப்பதாக இல்லை. ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினால், ஈரானோ வெறும் செய்தி பரிமாற்றம் தான் நடக்கிறது என்று கூறுகிறது.

அராக்சியின் பதிவு

அது மாதிரி, ஹார்முஸ் நீர்ச்சந்தியை இன்னும் அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ஈரான். ஆனால், ட்ரம்போ, ‘ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்று கூறுகிறார்.

இதற்கு பதிலடி தருவது போல, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“அமெரிக்கா தனது உளவுத்துறை தோல்விகளால் நீண்டகாலமாகவே தவறான கணக்குகளைப் போட்டு வருகிறது. அதற்குச் சிறந்த உதாரணம்: ஈரான் மீதான போர்.

இப்போது, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் அதைவிடப் பெரியதொரு தவறான கணக்கீட்டைச் செய்திருக்கிறது.

போலிச் செய்திகளை விட மிகவும் ஆபத்தானது போலி உளவுத்துறை அறிக்கைகள்தான். எச்சரிக்கையாக இருங்கள்.

அல்லாஹ் மிக பெரியவன். பூமியில் உள்ள எந்தவொரு சக்தியை விடவும் அவன் மிகவும் சக்திவாய்ந்தவன். நாங்கள் அல்லாஹ்வையே முழுமையாக நம்புகிறோம்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய...

தேனி: சுகாதாரமற்ற கழிவறைகள்; முகம் சுளிக்கும் பயணிகள்… புதிய பேருந்து நிலைய அவலம்!

தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள்...

`இணைந்தும் செயல்பட மாட்டோம்; விட்டும் செல்ல மாட்டோம்'- எடப்பாடிக்கு எதிராக சி.வி சண்முகம் தரப்பு!

அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான அதிருப்தி மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில்,...

சொத்து வரி மறு மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தம் – சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான சொத்து உரிமையாளர்களுக்கு அண்மையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட...