3
July, 2026

A News 365Times Venture

3
Friday
July, 2026

A News 365Times Venture

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" – திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

Date:

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவைத் தொடர்புகொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

செந்தில் பாலாஜி

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை.

எப்படியாவது இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முறையில்தான் இந்த முயற்சிகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

சில நாள்களுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், மாற்றம் வரும் என்று பேசியதன் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பெ.சண்முகம்

அதற்கான தீவிர முயற்சியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் சட்டமன்ற உறுப்பினரை விலை பேசியது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைவது தமிழ்நாட்டில் சகஜமான விஷயம்தான்.

ஆளுங்கட்சி மாறும்போது ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சிக்கு மாறுவது நிறைய நடந்திருக்கிறது. ஆனால் ஒருவரை கோடிகணக்கான ரூபாய்க்கு விலை பேசி வாங்குவதெல்லாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை… என்ன செய்யப்போகிறது அரசு?

கல்வி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் வளர்ச்சிப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது, தமிழ்நாடு....

“திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" – வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது...

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! – தெரிந்து கொள்ளுங்கள்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக...

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக...