2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" – தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

Date:

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர்.

தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய சி. விஜயபாஸ்கர், “‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’தான் மலர்ச்சியை உண்டாக்கும்.

சி. விஜய பாஸ்கர்

இன்று தவெகவில் இணைந்தது மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பே நாங்கள் தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம்.

ஆனால் தலைமை செவிகொடுக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு தவெகவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதையும் செவிமடுக்கவில்லை.

இதனைச் செவிமறுத்தவர் இயற்கைக்குப் புறம்பாக தீயசக்தியோடு கூட்டணி வைக்க முயன்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

எளிய மக்களின் குரலுக்குச் செவிமடுக்க ஒரு அரசு கிடைத்திருக்கிறது. தொண்டர்களை தோழர்களாக அணைத்துக்கொள்ள ஒரு நல்ல தலைமை கிடைத்திருக்கிறது. அதனால் இந்த இணைப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

சி. விஜய பாஸ்கர்
சி. விஜய பாஸ்கர்

இந்த இணைப்பு விழாவில் நீங்கள் பார்ப்பது வெறும் ட்ரைலர்தான். மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம். மாபெரும் இணைப்பு விழாவை முதல்வர் விஜய் தலைமையில் நிகழ்த்தி காட்டுவோம்.

இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தவெக வெல்லும். நாங்கள் துணை நிற்க வருகை தந்திருக்கின்றோம். இந்த வாய்ப்புக்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! – தெரிந்து கொள்ளுங்கள்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக...

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக...

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" – திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச்...

‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி – என்ன நடந்தது மதுரையில்?

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று மதுரையில் பல்வேறு...