23
August, 2026

A News 365Times Venture

23
Sunday
August, 2026

A News 365Times Venture

“ஸ்டாலின் அல்ல, கலைஞரே போட்டியிட்டாலும் நானே வென்றிருப்பேன்"- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு பேச்சு

Date:

சென்னை பெரம்பூரில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, “சட்டமன்றத்தேர்தலில் எனக்கு பிரசாரத்துக்கு 5 நிமிடம் மட்டுமே போதுமானதாக இருந்தது. தளபதி விஜய் என் தொகுதிக்கு வந்தவுடனே கொத்துபரோட்டா போட்டுவிட்டார்.

என் வெற்றி உறுதியாகிவிட்டது. அனைத்தும் முடிந்துவிட்டன. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் என்ன, அவரின் அப்பா கலைஞர் போட்டியிட்டிருந்தாலும் நான்தான் வென்றிருப்பேன்.

உதயநிதி ஸ்டாலின்

அவர்களைப் பற்றியும், எடப்பாடியைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். இனி இவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை. தேரவே மாட்டார்கள். இனி இரு கட்சிகளும் கிடையாது. ஒரே கட்சி தவெக-தான்.

முதல்வர் விஜய் பேசாமல் இருந்தால் பேசாமலே இருக்கிறார் என்கிறார்கள். பேசினால் ஓடிவிடுகிறார்கள். அவர் என்னதான் செய்வது. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருக்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு பூஜ்யம். அடிக்கடி அவையிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக ராஜினாமா செய்துவிட்டுச் செல்வது நல்லது” எனப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Canada Vs US: “தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" – கனடப் பிரதமர் காட்டம்

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி...

”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” – உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து...

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில்...

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" – கீர்த்தனா ஆதங்கம்

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில்...