23
August, 2026

A News 365Times Venture

23
Sunday
August, 2026

A News 365Times Venture

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" – கீர்த்தனா ஆதங்கம்

Date:

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “ஒரு பெண் தன் அன்றாட வேலையைப் பார்த்துக்கொண்டு இயல்பாகச் செல்லும் வீடியோ ஒன்று… இந்த அளவிற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது அதன் பின்னணியில் உள்ள பலவீனமான, பிற்போக்குத்தனமான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால் எனக்கு இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தெளிவுபடுத்துவதற்காகக் கூறுகிறேன், அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது?

ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?

அமைச்சர் கீர்த்தனா

எங்களது கொள்கைகள், ஆட்சி முறை அல்லது சாதனைகள் குறித்து எங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாதபோது, தலைவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்துப் போலிக் கதைகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.

நேர்மறையாகப் பங்களிக்க எந்தவொரு விஷயமும் இல்லாதவர்கள் கையாளும் மிகப்பழமையான ஆயுதமே பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வுதான்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஸ்டாலின் அல்ல, கலைஞரே போட்டியிட்டாலும் நானே வென்றிருப்பேன்"- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு பேச்சு

சென்னை பெரம்பூரில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப்...

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில்...

TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' – அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து வசதியின்றி சிரமப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காகப் புதிய பேருந்து...

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: “தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சட்டமன்றத்தில்...