12
October, 2026

A News 365Times Venture

12
Monday
October, 2026

A News 365Times Venture

வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!

Date:

வேலூர் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம், தற்போது நவீன வசதிகளுடன் புதிய தோற்றம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வேலூர் மக்களின் பயணத் தேவையை நிறைவேற்றி வரும் இந்த நிலையம், தற்போது பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அமிர்த் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் சுமார் ₹8.6 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் மூலம், வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் புதிய வடிவம் பெற்றுள்ளது. அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இந்தப் புதுப்பிக்கப்பட்ட நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்தப் புதுப்பிப்பில் முக்கிய கவனம் பெற்றிருப்பது, நிலையத்தின் புதிய வடிவமைப்பாகும். வேலூரின் வரலாற்றுப் பெருமையை எடுத்துக்காட்டும் வேலூர் கோட்டையின் கட்டடக் கலை அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் நிலையத்தின் வெளிப்புறத் தோற்றம் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு ஒரு நவீன ரயில் நிலைய அனுபவத்துடன், வேலூரின் பாரம்பர்ய அடையாளத்தையும் உணர முடிகிறது.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் அமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது. அதேபோல், பயணிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் நடைமேம்பாலத்தை எளிதாக அடைந்து, ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு சிரமமின்றி செல்லும் வகையில் லிஃப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீரமைக்கப்பட்ட நடைபாதைகள், வாகன நிறுத்துமிட வசதிகள் குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பயணிகள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பார்வைக் குறைபாடு உள்ள பயணிகளின் வசதிக்காக, நிலைய வளாகத்தில் ‘டாக்டைல் பாதை’ (Tactile Path) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்திலிருந்து சென்னை, திருப்பதி, விழுப்புரம், திருவண்ணாமலை, அரக்கோணம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் ஆன்மிகப் பயணங்களுக்காக தினமும் பலர் இந்த நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வேலூர் கண்டோன்மெண்ட்டுடன் சேர்த்து, அம்பாசமுத்திரம், நாமக்கல், பழனி, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களும் அமிர்த் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு ரயில் நிலையம் என்பது வெறும் ரயில்கள் வந்து செல்லும் இடம் மட்டுமல்ல; அது ஒரு நகரத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் அடையாளம். அந்த வகையில், வேலூர் கோட்டையின் பெருமையை தன்னுள் இணைத்து, நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம், வேலூரின் வளர்ச்சிப் பாதையில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது"- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு,...

“நான் முதல்வருக்கு அணிவித்த பொன்னாடை குறித்து கொச்சைப்படுத்த வேண்டாம்!" – நயினார் நாகேந்திரன்

இந்தியப் பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டுக்கு வந்ததையொட்டி, பல்வேறு சலசலப்புகள் அரசியல்...

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" – ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்...

'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்

"தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின்...