24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

Date:

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை.

அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ள தகவல்…

“சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவிற்கு அருகே பல வெடிச் சத்தங்கள் கேட்டன.

Kharg Island | கார்க் தீவு

கார்க் தீவில் உள்ள ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறுகையில், அந்த வெடிச் சத்தம் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்தே எழுந்ததாகத் தோன்றினாலும், அப்பகுதியில் புகையோ அல்லது தீயோ எழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதுவரை, அந்த வெடிப்புகளுக்கான காரணம் அல்லது அவை எங்கிருந்து எழுந்தன என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.”

இதுவரை அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தந்துள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல்தான் என்று உறுதியானால், ஈரான் என்ன பதிலடி கொடுக்குமோ?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT குறைப்பு; வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்' – அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது....

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல்...

“8 ஆண்டுகள் உழைத்த பணத்தை வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" – அமைச்சர் கீர்த்தனா

விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், தொழில்துறை அமைச்சருமான...