24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

“மத்திய அரசையோ மாநில அரசையோ விமர்சிக்கக் கூடாது" – அரசு ஊழியர்களுக்கு தவெக அரசு எச்சரிக்கை

Date:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அ. சோமசுந்தரம் அனைத்து அலுவலர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்துச் சார்நிலை அலுவலகங்களுக்கும், பணியாளர்களுக்கும் அனுப்பப்பட்டு உடனடியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

அந்த சுற்றறிக்கையில், “ அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ்கள் – Memes போன்றவை) அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது. மேலும், பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

அரசை விமர்சித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பங்கேற்கக் கூடாது. விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்தத் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கை உத்தரவு, தற்போது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT குறைப்பு; வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்' – அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது....

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல்...