6
May, 2026

A News 365Times Venture

6
Wednesday
May, 2026

A News 365Times Venture

விஜய் ப்ளான்; அதிமுக யோசனை?! – தவெக முன்னிருக்கும் ஆப்ஷன்கள் என்னென்ன?

Date:

மே 2026-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை தனியாக எட்ட முடியவில்லை. இந்தச் சிக்கலான அரசியல் சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்றக் கேள்வி தமிழ்நாட்டு மக்களின் முகங்களில் கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234.

இதில் த.வெ.க 108 இடங்களையும், தி.மு.க கூட்டணி 60 + 14, அ.தி.மு.க 46 + 7 என வென்றிருக்கின்றன.

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

இதில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மட்டுமே அவர் பதவியை தொடர முடியும், என்பதால், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதனால், ஒரு தொகுதி எண்ணிக்கை குறையும்.

மேலும், சட்டமன்றத்துக்கான சபாநாயகர் என ஒரு தொகுதி கணக்கில் வராது. எனவே, தற்போது இரண்டு தொகுதிகள் குறைந்து, த.வெ.க கையில் சட்டசபையில் வாக்களிக்க 106 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

எனவே, இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக போன்ற திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவளித்தால், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க முடியும். இது தொடர்பாக இன்று திருமாவளவன், சி.பி.ஐ பாண்டியன், சி.பி.ஐ-எம் சண்முகம் ஆகியோர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “த.வெ.க-வை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தனர்.

தவெக விஜய்
தவெக விஜய்

இதற்கிடையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய் தன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரின் ஆலோசனையில் இடதுசாரி கட்சிகளை உள்ளிழுப்பதற்கான முடிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக-வுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அமைச்சரவையில் இடம் எதிர்பார்க்க கூடுதல் வாய்ப்பிருக்கிறது.

அதேநேரம், அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்போ, விஜய்க்கு ‘எங்களின் பொது எதிரி திமுக-வை வீழ்த்தியதற்காக தவெக ஆட்சி அமைக்க அமைச்சரவைக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்’ எனக் கூறும் யோசனையிலும் இருக்கிறதாம்.

ஆனால் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் அதிமுக-வை விஜய் தேர்வு செய்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக வலம் வருகிறது.

விஜய் விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பாரா…. அல்லது அதிமுக முகாமை நோக்கி ஆதரவு கரத்தை நீட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி,...

மேற்கு வங்க முதல்வர் யார்? – மாநில பா.ஜ.க தலைவர்கள் டெல்லி விரைவு!

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 206 தொகுதிகளில்...

தேர்தல் முடிவுகள்: தவெக `மிஸ்' செய்த மாவட்டங்கள் – முழு விவரம் இதோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் எனும் பேரலையில்...