5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

MK Stalin: "கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன்!" – மு.க.ஸ்டாலின் உருக்கம்

Date:

T

கொளத்தூரில் அவரை போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8000 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

இன்று மாலை, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொளத்தூர் சென்றார் ஸ்டாலின்.

MK Stalin

அங்கு ஸ்டாலினின் தோல்வியை நினைத்து சேகர் பாபு கண்கலங்க, மக்களும் கோஷத்துடன் கண்கலங்கினர்.

தற்போது கொளத்தூர் தொகுதி அவருக்கு குறிப்பிடும்படியாக எத்தனை முக்கியமானது என தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள்.

அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

MK Stalin
MK Stalin

ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.

உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் முடிவுகள்: தவெக `மிஸ்' செய்த மாவட்டங்கள் – முழு விவரம் இதோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் எனும் பேரலையில்...

TVK: "மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு!" – ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது....