8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

விஜய்-ன் தவெக-வை இழுத்தடிக்கும் விசிக; குழப்பத்தில் அரசியல் களம் – என்ன நடக்கிறது?!

Date:

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார்.

இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக.

விஜய்

நேற்றே காங்கிரஸ் ஆதரவு கொடுத்துவிட்டது. ஏற்கெனவே 107 இடங்களை வைத்திருக்கும் தவெக உடன் காங்கிரஸ் சேர்ந்ததால், அந்த இடங்கள் 112 ஆக உயர்ந்தது.

இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தவெகவிற்கு ஆதரவை வழங்கியிருக்கின்றன. இதனால், 112 + 4 = 116.

விடுதலை சிறுத்தைக் கட்சி ஆதரவு கிடைத்தால் 118 சீட்டுகள் முழுமைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசிக ஆலோசனை கூட்டம் என்று இழுத்தடித்தது.

முஸ்லீம் லீக் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் இரண்டு சீட்டுகளை தவெக பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்துவிட்டார் தவெக தலைவர் விஜய்.

ஆக, 120 சீட்டுகளுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால், நாளை விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என்று கூறப்படும் நிலையில், விசிக, முஸ்லீம் லீக் இன்னும் ஆதரவு வழங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' – உண்மையை போட்டுடைத்த பேபி!

அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்கு தங்களையும்...

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி...

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு… திமுக-வுடன் உறவு!' – கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' – ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, ...