25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

"விஜய் அஞ்சி சென்றார்; நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம்" – திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின்

Date:

வழக்கு விசாரணைக்கு பிறகு சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“கடந்த 2025-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்போது, கரூரில் இருந்து திருச்சி வந்த தற்போதைய முதலமைச்சர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்தச் சமயத்தில், திருச்சி விமான நிலையத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

உதயநிதி

ஆனால், அந்தத் துயரத்திற்குப் பதிலளிக்க மனமில்லாமல், செய்தியாளர்களை எதிர்கொள்ள அஞ்சி அவர் எதற்கும் பதில் சொல்லாமல் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார். ஆனால், நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. எத்தகைய இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், எவ்வளவு கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டாலும், செய்தியாளர்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பதில் சொல்லும் தைரியம் எப்போதும் நமக்கு உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதை விட்டு ஓடி ஒளிய மாட்டோம்” என காட்டமாகத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்… ஆனால்!'- அமைச்சர் வன்னிஅரசு

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் பரந்தூர்...

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை...

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக...

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க...