‘திமுக எதிர்க்கட்சிதான்!’
திமுக – அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி ‘திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்’ என ட்வீட் செய்திருக்கிறார்.
திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!
திமுக – அதிமுக கூட்டணி என தகவல் பரவி வரும் நிலையில், ‘All is Fair in எங்க அரசியல்’ என ட்வீட் செய்திருக்கிறார் முன்னாள் எம். பி. செந்தில்குமார் .
‘ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்!’
புதுச்சேரி:
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் புதுச்சேரி பூராணாங்குப்பம் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்தனர்.
இந்த சூழலில், அதிமுகவின் பல எம்.எல்.ஏக்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து தங்க வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘பரபர சூழலில் தமிழக அரசியல்!’
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், திடீரென அவருக்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் ஒரே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். திமுக மற்றும் அதிமுக கூட்டணி சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோருவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.




