6
May, 2026

A News 365Times Venture

6
Wednesday
May, 2026

A News 365Times Venture

தள்ளிப்போகும் விஜய்யின் பதவியேற்பு விழா; முட்டுக்கட்டை போடும் கவர்னர்? – நிலவரம் என்ன?

Date:

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க உரிமைக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார் விஜய். நாளை (மே7) நேரு ஸ்டேடியத்தில் விஜய் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால், இப்போது கிடைத்திருக்கும் தகவல்படி விஜய்யின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் சூழல் இல்லை என தெரியவருகிறது.

Nehru Stadium

நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றிருந்தது. ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை தவெக எட்டவில்லை. தங்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வந்தது. அதன்படி மதவாத சக்திகளுக்கு துணைபோகக் கூடாது என்பதை நிபந்தனையாக விதித்து காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களுக்கும் தவெக ஆதரவளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, விஜய் இன்று மதியம் 3:30 மணிக்கு கிண்டி லோக் பவனில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமைக் கோரினார். அதேசமயத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்திலும் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வை நாளை பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.

Nehru Stadium
Nehru Stadium

இந்நிலையில், ஆளுநர் விஜய்யிடம் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களின் பட்டியலை கொடுக்குமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும், அப்படி கொடுத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் விஜய்யின் பதவியேற்பு விழா நாளை நடக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது. நாளை பதவியேற்பு விழா நடக்காத பட்சத்தில் நாளை மறுநாள் (மே8) பதவியேற்பு விழாவை நடத்த தவெக தரப்பில் திட்டமிட்டு வருகின்றனர். அதேமாதிரி, பெரும்பான்மையை பெற விசிக, கம்யூனிஸ்ட்டுகள், அதிமுக ஆகியோருடனும் தவெக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக – அதிமுக?' – நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க...

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! – அமைகிறதா திமுக – அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில்...

விஜய்க்கு எதிராக திமுக – அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! – பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய...

தூத்துக்குடி: தவெக பேனர் கிழிப்பு; கட்சியின் முன்னாள் நிர்வாகி அஜிதா ஆக்னலின் சகோதரர் கைது!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின்...