24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

மொழி விவகாரம்: "தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது; மொழியில் சர்ச்சைகள் வேண்டாம்" – அன்புமணி

Date:

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது தற்போது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.” தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

மேலும், கர்நாடகாவிலுள்ள எதிர்க்கட்சியான பாஜக-வும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

கமல்ஹாசன் – சிவராஜ்குமார்

அதேசமயம், விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில், வரலாற்று மொழியியல் வல்லுநர்கள் தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு கன்னடம் மலையாளம் பேசக்கூடிய மக்கள் அந்த உண்மையை ஏற்கத் தயங்கலாம். ஆனால், வரலாறு வரலாறுதான் உண்மை உண்மைதான்.

அதை எவரும் மறுக்க முடியாது. தமிழிலிருந்து பிற மொழிகள் சமஸ்கிருத கலப்பால் உருவாகியிருக்கின்றன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மை.” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ்தான்.

தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது. கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன.

எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும்.

அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.” என்று எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" – அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து...

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன்...

மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் – தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில்,...

“மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" – டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்...