24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

“மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" – டிடிவி தினகரன் காட்டம்

Date:

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வரை பலன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூரில் காலை உணவு உண்ட அரசு பள்ளி மாணவர்கள் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்கு ஆகும் செலவை விட அதை விளம்பரப்படுத்துவதற்கு அதிகம் செலவு செய்வதா? — தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்! திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை அருந்திய 36 மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது அரசின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருப்பது, அரசுப் பள்ளிகளின் சமையலறைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்க வழங்கப்படும் காலை உணவு, தவெக அரசின் அலட்சியப் போக்காலும் அதீத விளம்பர மோகத்தாலும், மாணவர்களின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் நஞ்சாக மாறியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் சமையல்கூடங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறைகள் என அரசுப் பள்ளிகளின் அவலநிலைகள் தொடர்கின்றன.

ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ தேவையற்ற கதைகளையும் அடுக்குமொழி வசனங்களையும் பேசி வருவது, அவர் இன்னும் பட்டிமன்ற மேடையை விட்டு வெளியே வரவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், கடந்த 22ஆம் தேதி முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவை விட, அந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மொழிகளில் நாளிதழ்களின் முதல் பக்கங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுதான் அதிகம் என்ற எழுந்திருக்கும் விமர்சனத்திற்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

முதல்வர் விஜய் உரை
முதல்வர் விஜய் உரை

எனவே, பல்லி விழுந்த உணவை அருந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் ஆணையம்: “ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" – அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள்...

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி...

தேர்தல் ஆணையம்: “இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" – முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி...

“ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" – அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி,...