27
May, 2026

A News 365Times Venture

27
Wednesday
May, 2026

A News 365Times Venture

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' – விஸ்வநாதன்

Date:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன்,” ரிசர்வ் வங்கியில் இருந்து நாசா தொடங்கி அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஐஐடி போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நேரு அவர்களால் கட்டமைக்கப்பட்டது.

மருத்துவம், பொறியியல் தேர்வில் தமிழ் மொழி இடம்பெறாதது அது டெக்னிக்கல் காரணம்.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசவிருக்கிறேன். அதில் முதலமைச்சர் வழிகாட்டுதன்படி செயல்படவிருக்கிறோம் முதலமைச்சரின் முடிவுக்கு காத்திருக்கிறோம், கண்டிப்பாக இது சம்பந்தமான கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கலந்து பேசவுள்ளேன்.

ராகுல் காந்தி – மேலூர் விஸ்வநாதன் –

முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். கடந்த அரசின் முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது.

எங்கள் அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உயர் கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலை நெறிமுறைபடுத்துவார். முதலமைச்சர் வழிகாட்டுதல்படி விரைவில் அறிவிப்புகள் வரும்.

ஒரு கட்சியில் இருந்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்திக்கப் போகிறார். மீண்டும் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு வர விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்தின் விரோதமாக இல்லை, என்னை பொறுத்தமட்டிலும் இதனை குதிரை பேரமாக கருதவில்லை

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் கருத்தும், ஜோதிமணியின் கருத்தும் முரண்பட்ட கருத்தாகவே நான் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது மாணிக்கம் தாக்கூருடையதுதான். மாணிக்கம் தாக்கூரின் கருத்து என்னுடைய கருத்து.

மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்கக்கூட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதுதான். தமிழக முதலமைச்சர் நிலைப்பாடு என்னவோ அந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும்” என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பாட்டிலுக்கு 10 ரூபாய்…' – ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

`பாட்டிலுக்கு 10 ரூபாய்...' என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய்...

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" – ஆவேசமான பினராயி விஜயன்!

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன்...

`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! – விஜய் மோடியிடம் வைத்த கோரிக்கைகள்

தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் அரசுமுறைப் பயணமாக...

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' – விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா...