27
May, 2026

A News 365Times Venture

27
Wednesday
May, 2026

A News 365Times Venture

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" – ஆவேசமான பினராயி விஜயன்!

Date:

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். பினராயி விஜயன் பேசுகையில், ​”அனைவருக்கும் தெரிந்தபடி, இன்று காலை 7 மணிக்குத்தான் இந்த வீட்டு வாசலுக்கு அமலாக்கத் துறையினர் வந்தனர். சோதனைக்கு வந்த குழுவினர் தங்களுக்குக் கிடைத்த உத்தரவின்படிதானே வர முடியும் அதிகாரிகள் என்று வரும்போது, தங்களுக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதைக் கேட்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். ​வீட்டில் நுழைந்து சோதனை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை விரும்பத் தொடங்கி நீண்ட காலம் ஆகிறது. இந்தச் சோதனை சிலருக்குப் பெரிய மனநிறைவைத் தரும் என்று தோன்றுகிறது. குறிப்பாக ராகுல் காந்திக்கு மனநிறைவை தரும். ஏனெனில், ‘ஏன் பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்தவில்லை, ஏன் பினராயி விஜயனை கைது செய்யவில்லை?’ என ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தார்.

அமலாக்கத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம் தொண்டர்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளை பா.ஜ.க தொடர்ந்து வருகிறது. அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ​ஆனால், தங்களது கட்சியைச் சேராத மற்றவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள் நடந்தால் நடக்கட்டும் என்ற சுயநல நிலைப்பாட்டையே காங்கிரஸ் எடுத்துள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இதோடு நாங்கள் முடிந்துபோகப் போவதில்லை. இதை ஒரு தொடக்கமாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதைக் கொண்டு எங்களைச் சோர்வடையச் செய்துவிடலாம் என்று யாரும் வீணாக நினைக்க வேண்டாம்.

தொண்டர்களிடம் ஆவேசமாக உரையாற்றிய பினராயி விஜயன்

நமது மண்ணின் உணர்வும், கட்சித் தோழர்களின் உணர்வும், எப்போதும் கட்சிக்கு இருக்கும் அளப்பரிய ஆதரவும்தான் இங்கே வெளிப்பட்டது. கட்சியின் எதிரிகள் எங்களைக் கொத்திக்குதற முயன்ற அனைத்துக் கட்டங்களிலும் இந்த ஆதரவுதான் எங்களுக்கு அரணாகக் கிடைத்துள்ளது. அந்த ஆதரவில் எந்தக் குறைவோ அல்லது சலனமோ இல்லை என்பதைத் தோழர்கள் இன்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதையும் எதிர்கொள்வோம், இதுவே நமது பலம். ஒன்றாக நாம் களமிறங்குவோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! – விஜய் மோடியிடம் வைத்த கோரிக்கைகள்

தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் அரசுமுறைப் பயணமாக...

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' – விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா...

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" – தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள...

கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள...