2
September, 2026

A News 365Times Venture

2
Wednesday
September, 2026

A News 365Times Venture

’மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது’ – நீதிபதி கருத்து

Date:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி, உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். “மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது.  கும்பாபிஷேக விழாவிற்காக அச்சிடப்பட்ட பத்திரிகையில் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மதுரை  மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் கோயில் அறங்காவலர் குழுவின் கடமைகளைச் செய்ய தடையோ, இடையோறோ செய்யாமல் ஒத்துழைப்பை அளிக்க உத்தரவிட வேண்டும். மதச்சார்பற்ற பணிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அறங்காவலர் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக்குமார், “அறங்காவலர் துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற அனைத்து கோயில் குடமுழுக்கிலும் அறங்காவலர் குழு பெயர் உள்ளது அதனையே பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையாளர் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்கள். கோயில் செயல் அலுவலர் தான் அறங்காவலர் பெயரை நீக்கி உள்ளார். அவர் சுயமாக இந்த முடிவை எடுத்து உள்ளார். இணை ஆணையர் செல்லத்துரை தனது பெயரை பத்திரிகையில் பதிவு செய்து உள்ளார். குடமுழுக்கு விழாவில் அறங்காவலர் குழு பெயர் விடுபட்டது தவறு” என்றார்.

மீனாட்சியம்மன் கோயில்

 அப்போது குறுக்கிட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், “3000 பத்திரிகைகள் அடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும் மீண்டும் பத்திரிகை கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதி பேசுகையில், “அறங்காவலர் பெயர் விடுபட்டது தவறு. அதே நேரத்தில் குடமுழுக்கு முடிந்தபின் கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம் பெற வேண்டும். கோயில் என்பது மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடம். இந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது, இது மிகவும் வருந்தத்தக்க செயல்.

இங்கு அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. வருங்காலங்களில் மத வழிபாட்டு தலங்களில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் இல்லாமல் விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? – TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப்...

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக...

போனுக்கு டோக்கன்: 'கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் இது' – அண்ணாமலை விமர்சனம்

நேற்று (செப்டம்பர் 1) முதல், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின்...

"பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா காரணம்; இழப்பீடு வேண்டும்" – குற்றம்சாட்டும் நேபாள அரசு

கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது....