18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

"பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 66% வாக்கு கிடைக்கவில்லை தான்; ஆனால், பெண்களின் 100%.." – மோடி

Date:

பலத்த எதிர்பார்ப்புகளுடனும், எதிர்ப்புகளுடனும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, பெண்கள் ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் ஆகவில்லை.

இதையடுத்து பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றி உள்ளார்.

மோடி உரையின் முக்கிய சாரம்சம்:

“நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சுயநல அரசியல் பெண்களை இப்போது பாதித்துள்ளது.

பிரதமர் மோடி

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் பெண்களின் உரிமையைப் பறித்துவிட்டு, அதற்கு வாழ்த்துகளும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தியாவின் பெண்களின் சக்தியை இவர்கள் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்திய பெண்களுக்கு உண்மை தெரியும்.

இந்த மசோதா ஒரு நேர்மையான முயற்சி ஆகும் மற்றும் இப்போது மிக தேவையான மசோதா ஆகும்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்து சிசுக்கொலை செய்துள்ளன.

பெண்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களது சுய நல ஆட்சி செய்ய முடியாது என்று குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்தியுள்ளன.

இப்போது இந்த மசோதாவிற்கு எங்களால் 66 சதவிகித வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால், பெண்களின் 100 சதவிகித ஆசீர்வாதம் எங்களுக்கு உள்ளது.

பெண்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு தக்க பதிலடி தருவார்கள்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜூ.வி மெகா சர்வே: `துரைமுருகனின் 50 ஆண்டு அரசியல்' – என்ன சொல்கிறது வட மாவட்டங்களின் களநிலவரம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய...

Delimitation: 'இப்போ 9 சீட்டுகளை தானே இழந்திருப்போம்; ஆனா, 2026-ஐ பார்த்தால்' – பழனிசாமியின் கணக்கு

தொகுதி மறுவரையறை மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு எதிர்ப்பு...

ஜூ.வி மெகா சர்வே: `செங்கோட்டையன் டு வானதி சீனிவாசன்!' – கொங்கு மண்டலம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய...