18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

ஜூ.வி மெகா சர்வே: `செங்கோட்டையன் டு வானதி சீனிவாசன்!' – கொங்கு மண்டலம் யாருக்கு?

Date:

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் 2026

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.

கோபிசெட்டிபாளையம்

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தி.மு.க-வின் வேட்பாளராக நல்லசிவம், அ.தி.மு.க-வில் பிரபு, த.வெ.க-வில் செங்கோட்டையன், நா.த.க-வில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர்.

கோபிசெட்டிபாளையம்
கோபிசெட்டிபாளையம்

செங்கோட்டையனின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில், இன்றைக்கு இரட்டை இலை சின்னம் அவருக்கானதாக இல்லை என்பது மைனஸ். செங்கோட்டையனை வீழ்த்தியே ஆக வேண்டும் என களத்தில் பிரபுவை இறக்கியிருக்கிறது அ.தி.மு.க. செங்கோட்டையன் பிரிக்கும் அ.தி.மு.க-வின் வாக்குகள் நல்லசிவத்திற்கு ப்ளஸ்ஸாக மாறுகிறது. செங்கோட்டையனா, பிரபுவா என முட்டி மோதும் இந்தப் போட்டியில் சத்தமில்லாமல் வாக்குகளை அறுவடை செய்கிறார் நல்லசிவம்!

ஈரோடு – திருப்பூர் – நீலகிரி – கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற வேட்பாளர்களில் இன்னும் கூடுதல் கவனம் பெற்ற வேட்பாளர்களாக பவானி தொகுதியில் கே.சி.கருப்பணன், அவினாசியில் எல்.முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி வேலுமணி, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, பொள்ளாச்சி தொகுதியில் ஜெயராமன் ஆகியோர் நட்சத்திர வேட்பாளராக வளம் வருகின்றனர்.

கொங்கு மண்டல தொகுதிகளின் களநிலவரம் குறித்து விரிவாக அலசியிருக்கிறது விகடன் மெகா சர்வே. முழு நிலவரத்தையும் அறிய க்ளிக் செய்யவும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Delimitation: 'இப்போ 9 சீட்டுகளை தானே இழந்திருப்போம்; ஆனா, 2026-ஐ பார்த்தால்' – பழனிசாமியின் கணக்கு

தொகுதி மறுவரையறை மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு எதிர்ப்பு...

ஜூ.வி மெகா சர்வே: `பிரேமலதாவுக்கு கை கொடுக்குமா விருதாச்சலம்?' – டெல்டா மாவட்டங்கள் யாருக்கு சாதகம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய...

'என்ன தான் நடக்கிறது?' மீண்டும் ஹார்முஸை மூடிய ஈரான்; என்ன காரணம் சொல்கிறது? ட்ரம்பின் Reaction!

கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு, நேற்று தான் ஹார்முஸ் ஜலசந்தி...