4
September, 2026

A News 365Times Venture

4
Friday
September, 2026

A News 365Times Venture

`புதுச்சேரி வருகிறார் நித்தியானந்தா!' – முதல்வர் ரங்கசாமியிடம் தியான பீட நிர்வாகிகள் சொன்னதென்ன ?

Date:

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த நித்தியானந்தரின் சீடர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.

அப்போது, ஏம்பலத்தில் அமைந்திருக்கும் தியான பீடத்திற்கு விரைவில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ரங்கசாமியுடன் நித்தியானந்தா சீடர்கள்

மேலும், “சுவாமி நித்தியானந்தா புதுச்சேரி வருவது தொடர்பாக மத்திய அரசிடமும் பேசி வருகிறோம். அதனால் அவர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு, “சரி… அவர் வரட்டும்… பார்த்துக் கொள்ளலாம்…” என்று சொன்ன முதல்வர் ரங்கசாமிக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை வழங்கினர் தியான பீட நிர்வாகிகள்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா, கடந்த 2020-ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக வீடியோக்களில் மட்டும் பேசி வரும் நித்தியானந்தா, புதுச்சேரிக்கு வருவதாக அவரின் சீடர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' – நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய...

“உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகள் செலவை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும்" – அதிபர் ட்ரம்ப்

உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான செலவை...

TATA: “எங்களுக்கு எந்தப் பயனுமில்லை…" – டாடா நிறுவனத்தை மூட கென்யா அதிபர் முடிவு!

கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம்...