12
August, 2026

A News 365Times Venture

12
Wednesday
August, 2026

A News 365Times Venture

பிளாஸ்டிக்கை தடை செய்த ஜோ பைடன்: தடையை நீக்கிய ட்ரம்ப் – சொல்லும் காரணம் தெரியுமா?

Date:

முன்னாள் அதிபர் ஜோ பைடன், 2035-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளையும் படிப்படியாக ஒழிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் முதல்படியாக படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் திட்டம் ஒன்றை செயல்படுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாடும் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜோ பைடனுக்குப் பிறகு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கிறார். இவர் பதவியேற்றதிலிருந்தே மூன்றாம் பாலினத்தை தடை செய்தது, சட்டவிரோத குடியேறிகளை நாட்டைவிட்டு அப்புறப்படுத்துவது எனத் தொடர்ந்து பரபரப்புடனும், சர்ச்சைக்குரிய வகையிலும் பணியாற்றிவருகிறார்.

ட்ரம்ப் – ஜோ பைடன்

இந்த நிலையில், ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்து செயல்பாட்டில் வந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை மீண்டும் அனுமதிக்க, முந்தைய அரசின் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அதிபர் ட்ரம்ப், “வேலை செய்யாத பேப்பர் ஸ்ட்ராக்களுக்கான பைடனின் அபத்தமான திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் அடுத்த வாரம் கையெழுத்திடுவேன். பிளாஸ்டிக்கிற்குத் திரும்பு! உங்கள் வாயில் அருவருப்பான முறையில் கரையும் ஸ்ட்ரா இல்லாமல் உங்கள் அடுத்த பானத்தை அனுபவியுங்கள்!!!” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Assembly: தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானத்தை கொண்டுவரும் முதல்வர் விஜய்! திமுக-வின் முடிவு என்ன? | Live Updates

தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்!தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது....

TN Assembly: `கூவத்தூரில் நடந்ததைப் பற்றி இங்கே யாரும் பேசவில்லை; அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தாமாகவே' – சி.டி.ஆர் | Live

`உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததால்தான் தவெகவை நோக்கி அதிமுகவினர்...

தமிழ்த்தாய் வாழ்த்து: "இந்தப் போக்கு தொடரவேண்டும்!" – தவெக அரசை பாராட்டும் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம்...